திமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. விரட்டி பிடித்தது தேர்தல் பறக்கும் படை
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே திமுக பிரமுகர் சென்ற காரில் இருந்து ரூ.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை நடத்தினர். திருச்செந்தூர் அருகே அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ஒரு கார், நிற்காகமல் தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
விழுப்புரத்தில் யாருக்கு வெற்றி? கடந்த கால தேர்தல் வரலாறு என்ன சொல்கிறது.. இதை பாருங்க!
அந்த கார் திமுக பொதுக்குழு உறுப்பினர் கொட்டங்காடு வசீகரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த காரை சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் ரூ.40 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே உருளைக்குடி கிராமத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications