அரோகரா.. முருகனுக்கு அரோகரா! திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சீமான் 2 அடியில் தங்க வேல் காணிக்கை!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2 அடியில் தங்கத்தினாலான வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார் நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த 'வேல்' காணிக்கையை சீமான் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தனது மனைவி, மகன் என குடும்பத்தினருடன் சென்ற சீமான், கடற்கரையில் கால் நனைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கோயில் வாசலில் ஆளுயர மாலையை சீமான் கையில் கொடுத்த அர்ச்சகர்கள் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
பட்டு வேட்டி பட்டுச் சட்டை சகிதமாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த சீமானுக்கு, உண்டியல் அருகே திருஷ்டி சுற்றப்பட்டு தேங்காய் உடைக்கப்பட்டது.
இதையடுத்து முருகனுக்காக தாம் தயார் செய்து கொண்டு வந்திருந்த தங்க வேலை வழங்கி மனமுருக வழிபட்டார். அவருடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

கோயிலில் மன நிறைவாக தரிசனத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சீமான், அங்கிருந்த அர்ச்சகர்களுக்கு ஆளுக்கு ரூ.1,000 தட்சணை வழங்கவும் தவறவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் டொயோட்டா பார்ச்சூனர் புது கார் வாங்கிய சீமான், திருப்போரூர் முருகன் கோயிலில் வைத்து பூஜை செய்த பிறகு தான் அந்தக் காரை அவர் பயன்படுத்த தொடங்கினார். அந்தளவுக்கு சீமான் தீவிர முருகப்பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications