ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கலந்து கொண்டார்
இந்த துப்பாக்கி சூடு குறித்த தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடம் ஆகியும் கூட இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றார்.

ஆனால் முன்னேற்றம் இல்லை
இதில் பெரிதாக அரசு தரப்பை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இன்னும் விசாரிக்கப்படவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

என்ன பேசினார்
கடந்த வருடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மக்கள் முன்னிலையில் அவர் பேசினார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்ட்டுள்ளது.

அருணா ஜெகதீசன் முன்பு
அருணா ஜெகதீசன் முன்பு நேரில் ஆஜராகி சீமான் விளக்கம் அளிக்க வேண்டும் , போன் மூலம் பேச கூடாது, என்று கூறப்பட்டுள்ளது. சீமான் மட்டுமின்றி திமுகவை சேர்ந்த சில உறுப்பினர்கள். சில சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது போல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications