தூத்துக்குடி எஸ்பியாக பதவியேற்ற ஒரே மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட சிலம்பரசன் ஐபிஎஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கடந்த மாதம் 3ம் தேதி தான் அந்த பொறுப்பேற்றார். ஆனால் பதவியேற்ற ஒரே மாதத்தில் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர மேற்கு பகுதி துணை ஆணையர் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சிலம்பரசனுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆல்பர்ட் ஜானும் மிகக் குறுகிய காலத்திலேயே மாற்றப்பட்டார். அவர் மத்திய அரசு பணிக்கு சென்றார். தேசிய புலனாய்வு முகமைக்கு எஸ்பியாக மாற்றப்பட்டதால், கடந்த மாதம் 3-ந்தேதி தான் சிலம்பரசன் ஐபிஎஸ் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றார். இந்தநிலையில் நிர்வாக நலன் கருதி 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர மேற்கு பகுதி துணை ஆணையர் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், தலைமையிட துணை ஆணையர் எஸ்.விஜயகுமார், நெல்லை மேற்கு பகுதி துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஒரே மாதத்தில் தூத்துக்குடி எஸ்பி சிலம்பரசன் இடமாற்றம் செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பர்ட் ஜான் மத்திய அரசுப் பணிக்குச் சென்றது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றே பார்க்கப்படுகிறது. ஆனால், அவருக்குப் பின் சிலம்பரசன் ஐபிஎஸ் ஒரே மாதத்தில் மாற்றப்படுவது, தேர்தலே காரணம் என்று பார்க்கப்படுகிறது. சிலம்பரசன் ஐபிஎஸ் இதற்கு முன்பு திருநெல்வேலியில் பணியாற்றி உள்ளார். நெல்லை மற்றும் தூத்துக்குடி என அடுத்தடுத்து தென் மாவட்டங்களிலேயே பணியாற்றியதால், தேர்தல் சமயத்தில் 'லோக்கல் இன்புளுயன்ஸ்e' இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த இடமாற்றம் நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என பார்க்கப்படுகிறது.
பொதுவாக தேர்தல் காலங்களில் மாவட்டங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அண்மையில் தான் தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவிட்டிருந்தது. தேர்தல் காலங்களில் ஒரே இடத்தில் அல்லது அண்டை மாவட்டத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.அதேபோல் அவரது சொந்த மாவட்டம் என்றால், கண்டிப்பாக நியமிக்கவே கூடாது... இதுவும் விதியாகும். அந்த அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு தேர்தலின் போது மாற்றப்படுவார்கள். அந்த வகையில் தான் தூத்துக்குடியிலும் நடந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications