தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழுகுமலையில் காசநோய் தடுப்பு முகாம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே கழுகுமலையில், அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கழுகுமலை அரசு நிலைய மருத்துவ அலுவலர் பிரவின் குமார் தலைமை வகித்தார், நிலைய மருத்துவ அலுவலர் பாப்பு முன்னிலை வகித்தார்.

அரசு சமுதாய சுகாதார நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். இம்முகாமில் காசநோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மருந்து எடுக்க வேண்டும்

மருந்து எடுக்க வேண்டும்

நிலைய மருத்துவ அலுவலர் பிரவின்குமார் பேசுகையில் காசநோயாளிகள் மாத்திரை உட்கொள்ளும் காலத்தில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கூறியது உபயோகமாக இருந்தது. மேலும் காசநோய் பற்றிய கேள்விகளுக்கு மருத்துவர் பதில் அளித்தது கூடுதல் சிறப்பு.

சத்துணவுக்கும் தொகை

சத்துணவுக்கும் தொகை

மருத்துவ அலுவலர் பாப்பு அவர்கள் காசநோயாளர்களுக்கு சிகிச்சையின் போது ஒவ்வொரு மாதமும் அரசு வழங்கும் சத்துணவு உதவித்தொகையான நிக்சன் போஜன் யோஜனா (NPY) திட்டம் பற்றி விளக்கமாகத் தெரிவித்தார்.

பரிசோதனை

பரிசோதனை

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் கூறுகையில் நோயாளிகள் சிகிச்சையின் போது பரிசோதனை செய்ய வேண்டிய காலங்கள் இருப்பதாக அறிய முடிந்தது.

பொது சுகாதார விளக்கம்

பொது சுகாதார விளக்கம்

மேலும் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் பொது சுகாதாரம் பற்றி கூற, நிகழ்ச்சியின் முடிவில் சுகாதார ஆய்வாளர் அமல்ராஜ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

English summary
A special camp was arranged in Kalugumalai under National Tuberculosis Prevention Program.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X