மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்.. கிறிஸ்துமஸ் - புத்தாண்டையொட்டி நாளை முன்பதிவு தொடக்கம்
தூத்துக்குடி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (டிசம்பர் 10) தொடங்க உள்ளது.
விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே சார்பில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தான் கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து தமிழகத்தின் தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் டிசம்பர் 27 ம் தேதி (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு மைசூர் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ( 06283) புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
மறுமார்க்கமாக டிசம்பர் 24 (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06284) மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூரை சென்றடைய உள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (டிசம்பர் 10)ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும். இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்று, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 2, 9 ஸ்லிப்பர் கிளாஸ், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 செகண்ட் கிளாஸ் கம் லக்கேஜ் பிரேக் வேன் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு இருக்கும்.

இந்த ரயில்கள் இருமார்க்கமாக கர்நாடகாவின் மண்டியா, மத்தூர், சென்னப்பட்டணா, ராமநகர், கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூர் (பெங்களூர் சிட்டி), பெங்களூர் கண்டோன்மென்ட், தமிழகத்தின் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications