திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ஆச்சரியம்.. போன மாசம் இது இல்லையே? தூத்துக்குடிக்கு சப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல், தை மாத விழாக்கள், விடுமுறை நாட்களிலும், சிறப்பு தினங்களிலும் ஏராளமானோர் திரண்டு வருவது வாடிக்கையாகும்.. கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி உண்டியல்களில் காணிக்கையும் செலுத்திவிட்டு செல்கிறார்கள். அந்தவகையில், திருச்செந்தூர் கோயில் சார்பாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.. உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோயிலில் விசேஷ, விரத, விடுமுறை நாட்களின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.. பிற நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்..15 வருடங்களுக்கு பிறகு, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.. வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

Tiruchendur Murugan Temple Thiruchendur Koil hundial

ஜரூர் கும்பாபிஷேக பணிகள்

இதற்கான பணிகள், கடந்த 2022லிலிருந்தே நடந்து வருகிறது.. HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும் நடக்கின்றன.. அதேபோல, 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகளும் மும்முரமாகி வருகின்றன.

கடந்த மாதம்கூட, ராஜகோபுரத்தில் 9வது நிலையில் கட்டபொம்மன் காலத்தில் உள்ள ராஜகோபுர மணி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கு, வர்ணம் பூசும் பணியும் நடந்தது.. ஏனென்றால், கும்பாபிஷேகம் தினத்தில், இந்த மணிதான் ஒலிக்க போகிறதாம்..

கண்ணை கவர்ந்த ராஜவேல்

மேலும், ராஜகோபுரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 40 அடி உயரம் கொண்ட வேல் ஒன்றும் பிரம்மாண்டமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேல் சென்னையில தயார் ஆனது.. இதை செய்வதற்கு ஒரு மாத காலம் ஆகிவிட்டதாம்.. பிறகு சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு கொண்டு வந்து, இதனை ஊழியர்கள் கோயிலில் பொருத்துவதற்கு 2 நாட்களாகிவிட்டதாம்.

இந்நிலையில், பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது.. வழக்கமாக தினந்தோறும் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்யும்போது, அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள்.. இந்த காணிக்கையானது மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இரண்டு நாட்களாக நடந்த பணி

காணிக்கை எண்ணும் பணிக்கு கோவில் தக்கார் அருள்முருமுருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.. மேலும், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, அறநிலையத்துறை ஆய்வாளர் செந்தில் நாயகி ஆகியோர் மேற்பார்வையில் சிவகாசி பதிணெண் சித்தர் மடம் குரு குல வேதபாட சாலை உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இறுதியில், உண்டியல் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், ரூ.4 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரத்து 186, 1 கிலோ 74 கிராம் தங்கம், 30 கிலோ 450 கிராம் வெள்ளி பொருட்கள், 1,530 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளன.

டபுள் மடங்கு எகிறியது

கடந்த மாதம் வசந்த மண்டபத்தில், கோயில் காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது, உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 51 லட்சத்து 386 ஆயிரத்து 242 கிடைத்தது. மேலும் தங்கம் ஆயிரத்து 40 கிராமும், வெள்ளி 20 ஆயிரத்து 800 கிராம், 1,248 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இப்போது கடந்த மாதத்தைவிட இந்த மாதம் காணிக்கை டபுள் மடங்காகி இருப்பது வியப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+