திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆச்சரியம்.. அந்த 9 கலசங்கள்.. அதைவிடுங்க, இன்று கடலில் ஒரு மாற்றம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தையும் நடத்திட வேண்டும் என்பதற்காக திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், திடீரென கடல் உள்வாங்கியிருக்கிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது... உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோயிலில் விஷேச, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கமாகும்.

பக்தர்கள்: எனவே, இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.. அதுமட்டுமல்லாமல் 15 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அடுத்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது..
இதற்காகவே கடந்த 2022-ம் ஆண்டு முதல் பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.. குறிப்பாக ரூ.16 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரத் திருப்பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றன. 137 அடி உயரமும், 9 நிலைகளையும், 9 கலசங்களையும் கொண்ட ராஜகோபுரத்தை முற்றிலும் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், ராஜகோபுரத்தின் கீழ்த்தளப் பகுதிகள், தூண்கள் போன்றவற்றை புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
ராஜகோபுரம்: தற்போது ராஜகோபுரத்தின் மேலே உள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டுத் தனியாக பிரித்துக் கீழே கொண்டு வந்து புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. அப்போது 9 கலசங்களிலுள்ள பழைய வரகு மாற்றப்பட்டபோது, கலசத்துக்குள் இருந்த வரகு, அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததை பார்த்து அறநிலையத்துறை அதிகாரிகளும், பக்தர்களும் ஆச்சரியப்பட்டு போனார்களாம்..
இந்நிலையில், திருச்செந்தூர் கடல் உள்வாங்கியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது.. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
பவுர்ணமி: கோயில் கடற்கரை பகுதியில் வழக்கமாக, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல்நீர் மட்டத்தில் இப்படியெல்லாம் மாற்றம் ஏற்படும். நேற்று பவுர்ணமி என்பதால், அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டது. அதுவும் குபேர பவுர்ணமி என்பதால் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வர ஆரம்பித்துவிட்டனர்.
4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. நேற்று அதிகாலையிலேயே அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்... மேலும், நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கானோர் கோவிலில் நிலா ஒளியில்கடற்கரையில் தங்கினார்கள்.
கடல் உள்வாங்கியது: இன்று காலையில் அவர்கள் கடற்கரையில் நீராடினர்.. இந்நிலையில், இன்று திடீரென பிற்பகலில் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 20 அடி தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியதால், அங்கிருந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது கடற்கரையிலிருந்த பொதுமக்கள் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் அங்கிருந்த அதிகாரிகளும், பாதுகாப்பு போலீசாரும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து செல்ல பொதுமக்களை அறிவுறுத்தினார்கள்.. திடீரென 80 அடி கடல் உள்வாங்கியிருப்பதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications