Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கடலில் மாற்றம்.. அந்த பாசி படர்ந்த பாறையில்.. பக்தர்கள் அசரலையே.. நாளைக்கு என்னாகுமோ?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தையும் நடத்திட வேண்டும் என்பதற்காக திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.. இது தொடர்பான பணிகளும் வேகம் எடுத்துள்ள நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற இக்கோயிலில் விஷேச, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கமாகும்.

tiruchendur thiruchendur tiruchendur murugan temple thoothukudi

திருச்செந்தூர்: அந்தவகையில், தற்போது பக்தர்களின் வசதிக்காகவே, ரூ.300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.. மேலும், 15 வருடங்களுக்கு பிறகு, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அடுத்த வருடம் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளதால், இதற்கான பணிகளும் கடந்த 2 வருடங்களாகவே, சுமார் 100 கோடி செலவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கலசங்களை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாகி கொண்டிருக்கின்றன.. எனவே, திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

பருவமழை: இப்படிப்பட்ட சூழலில், திருச்செந்தூர் கடல் உள்வாங்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பருவமழை துவங்கியிருக்கும் சூழலில், தமிழகமெங்கும் ஆங்காங்கே மழை கொட்டி வருகிறது.. அந்தவகையில், சமீபத்தில்கூட திருச்செந்தூரிலும் நல்ல மழை பெய்தது. அப்போது, கோயில் கடற்கரையில் கடல் உள்வாங்கியிருந்தது..

அதேபோல, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் திருச்செந்தூர் கடல் உள்வாங்கிவிடும். குறிப்பாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்கிவிடும்.. பிறகு மாலையிலேயே இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அமாவாசை: அந்தவகையில், நாளை மறுநாள் அமாவாசை தினமாகும்... இதனை முன்னிட்டு இன்று காலையிலேயே திடீரென கடல் நீர் உள்வாங்க தொடங்கியது.

கிட்டத்தட்ட 50 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன... எவ்வளவுதான் கடல் உள்வாங்கினாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கலங்குவதே கிடையாது.. துளியும் பயமின்றி, பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் கடல் அழகை கண்டு களித்தனர்.. பக்தர்கள் வழக்கம்போல் கடலில் நீராடி சாமி தரிசனமும் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+