திருச்செந்தூர் பொக்கிஷம்: 90 வயதிலும் பஸ்சுல வந்து 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் பொன்னையா
தூத்துக்குடி: திருச்செந்தூர் டாக்டர் பொன்னையா என்றாலே தூத்துக்குடி முழுக்க ஃபேமஸ். இவரை எல்லாரும் 20 ரூபாய் டாக்டர் என்றுதான் சொல்வார்களாம்.. ஆறுமுகநேரி மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒரு உன்னத மனிதர் இவர்.. ஏழைகளின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர்.. இன்று டாக்டர் பொன்னையாவை இழந்து தூத்துக்குடி மக்கள் கலங்கி போயிருக்கிறார்கள்... !!
ஒரு டாக்டர் நோயை தீர்ப்பவராக மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களை வென்ற மாமனிதராக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்தான் பொன்னையா.

திருச்செந்தூர் டாக்டர்
இவரது மருத்துவ பயணம் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக பணியாற்றிய போதே, ஏழை எளிய மக்களின் துயரைக் கண்டு கலங்கியவர்...
அதனால்தான் தன்னுடைய சொந்த ஊரான ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஒரு சிறிய கிளினிக்கை, மக்களுக்காகவே ஆரம்பித்தார்.. பல மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சலுக்கே பெரும் செலவு பிடிக்கும் காலக்கட்டத்தில், பொன்னையா மட்டும் அன்று வெறும் 10 ரூபாய் வாங்கினாராம்.. பிறகு பல காலம் கழித்து 20 ரூபாய் வாங்கி உள்ளார்.. அந்த 20 ரூபாயுடன் அவரது பீஸ் நின்றுவிட்டது..
20 ரூபாய் டாக்டர் பொன்னையா
தரமான சிகிச்சையையும் அன்பான பேச்சையும் மருந்தாக தந்து மக்களின் மனங்களை வெல்வதில் உறுதியாக இருந்தவர் பொன்னையா...
அரசுப் பணியில் இருந்தபோதும்சரி, பணி மாறுதல்கள் காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்றபோதும்சரி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனது கிளினிக் வந்து மக்களுக்கு சேவையாற்ற அவர் தவறியதில்லை. பணி ஓய்வு என்பது மற்றவர்களுக்கு ஓய்வெடுப்பதற்கான காலம், ஆனால் பொன்னையாவுக்கு அது முழுநேர மக்கள் சேவைக்கான வாய்ப்பாக அமைந்தது.
பொக்கிஷம் - மனிதாபிமானி
திருநெல்வேலியில் வசித்து வந்த போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக தள்ளாத வயதிலும் தவறாமல் பஸ்ஸில் பயணம் செய்து ஆறுமுகநேரிக்கு வந்து நோயாளிகளை பார்த்துக் கனிவோடு அரவணைத்தார்.
மருத்துவ செலவுகள் விண்ணைத் தொடும் இன்றைய சூழலிலும் தன்னுடைய சேவையை கைவிடவில்லை.. ஒரு வாரத்திற்கு முன்புகூட நோயாளிகளுக்கு வெறும் 20 ரூபாய்க்குச் சிகிச்சை அளித்து வந்தாராம்... இவரை கண்டு வியக்காதவர்கள் யாருமேயில்லை.. இதனால் இந்த பகுதி மக்கள் அவரை 20 ரூபாய் டாக்டர், அன்பான டாக்டர் என்றும் செல்லமாக அழைக்கிறார்கள்...
பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், நோயாளியின் புன்னகையையே தனது ஊதியமாகக் கொண்டு செயல்பட்ட உன்னத ஆன்மாவாகவே வாழ்ந்திருக்கிறார்.. இப்போது டாக்டர் பொன்னையாவுக்கு 90 வயதாகிறது.. வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
உருக்கம் - நெகிழ்ச்சி - நன்றி
அவரது மறைவுச் செய்தி கேட்ட ஆறுமுகநேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், ஒட்டுமொத்தமாகத் திரண்டு அவர் 45 ஆண்டுகளாக சேவையாற்றிய அதே கிளினிக்கிற்கு வந்தனர். அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்த்து ஏழை எளிய மக்கள் கதறி அழுத காட்சி காண்போரை உருக்கமடைய செய்தது. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்கள், பொன்னையாவின் குடும்பத்தினரிடம் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
"எங்கள் வீட்டில் ஒருவராகவே டாக்டர் பொன்னையா இருந்தார், இனி யாரை நம்பி நாங்கள் இருப்போம்?" என்று மக்கள் எழுப்பிய கேள்விகள் அனைவரின் கண்களையும் குளமாக்கியது.
டாக்டர் பொன்னையா எத்தகைய உயரிய நோக்கத்திற்காக இந்தக் கிளினிக்கைத் தொடங்கினாரோ, அதே சேவையை அவரது வாரிசுகளோ அல்லது உறவினர்களோ தொடர்ந்து நடத்திட வேண்டும் என மக்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். ஒரு தலைசிறந்த டாக்டர் மறைந்தாலும், அவர் விதைத்த மனிதாபிமானம் இப்பகுதி மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் உறுதி...!!
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications