21 இடங்களில் வெட்டப்பட்ட போலீஸ்காரரின் மனைவி.. கணவர் தற்கொலை செய்த ஓராண்டு நினைவு நாளில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பிரிவு காவலர் தற்கொலை செய்துகொண்டு இன்று ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், அவரது மனைவி 21 இடங்களில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக செல்வமுருகன் பதவி உயர்வு பெற்று கடந்த ஆண்டு ஜுலை 14ஆம் தேதி முதல் பணியாற்றி வந்தார்.இவருக்கு அருணா (42) என்ற மனைவி, கமலேஷ் (18), அகிலேஷ் வர்ஷன் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி காலை உடன்குடி கூலையன்குன்று பகுதியில் பனங்காட்டில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

கழுத்தறுத்து படுகொலை

கழுத்தறுத்து படுகொலை

இதனைத்தொடர்ந்து அவரது மனைவி அருணா (38) உடன்குடி -பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டு கழிவறையில் அருணா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை செய்யப்பட்ட அருணாவின் உடலி ல் 21 இடங்களில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது.

படுகொலை

படுகொலை

உயிரிழந்த தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் நினைவு நாள் அக்டோபர் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் அவரது மனைவி அருணா 21 இடங்களில் வெட்டியும் , கழுத்தறுத்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை

விசாரணை

தகவலறிந்த திருச்செந்தூர் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதுதொடர்பாக உடலை கைப்பற்றிய குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் அவரது உறவினர்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

முன்னதாக கடந்த ஆண்டு செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத் தகராறா? என்பது அப்போது பெரிய கேள்வி எழுந்தது . இந்த சூழலில் அடுத்த ஓராண்டில் அவரதுமனைவி 21 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகரிப்பு

அதிகரிப்பு

கொலைக்கு என்ன காரணம் என்பதையும், கொலை செய்தவர்கள் யார் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அண்மைக்காலங்களில் ஏராளமான படுகொலை சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இதன் காரணமாக போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்த சூழலில் போலீஸ்காரின் மனைவி மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+