கலங்கி நின்ற கோவில்பட்டி பில் கலெக்டர்.. தூத்துக்குடியில் ஒரே நாளில் மாறிய தலையெழுத்து
தூத்துக்குடி: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டால், அது அவர்களுக்கு தீராத சிக்கலை ஏற்படுத்தும். ஓய்வு பெற்ற பின்னர் கூட சிலருக்கு வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது. இவ்வளவு சிக்கல் இருந்தும் சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தொடருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவிப்பட்டியில் சொத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த சொத்துக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்ய 25 ஆயிரம்ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
அரசு ஊழியர்களை யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை பற்றி உங்கள் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளியுங்கள். அப்படி புகார் அளித்தால் அவர்கள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். பலரும் இப்போது ஆர்வமுடன் புகார் அளிக்கிறர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஊரணி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரை கண்ணன் நாடார் தனது மகள் காளீஸ்வரி பெயருக்கு சொத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு எழுதி தந்துள்ளார். அதன்படி காளீஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு காளீஸ்வரியின் கணவர் செல்வக்குமார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அங்கிருந்த பில் கலெக்டர் 29 வயதான நவீனா என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார் . இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்.ஐ. தளவாய் மற்றும் சுந்தரவேல், பாண்டி, கோமதி, முத்து, ஷியாம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
மேலும் செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் பத்தாயிரத்தை பில் கலெக்டர் நவீனா, நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவு அறையில் வைத்து செல்வகுமாரிடமிருந்து பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பில் கலெக்டர் நவீனா கண்ணீர் விட்டு அழுதார். லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையிலான போலீசார் பில் கலெக்டர் நவீனாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications