தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் ஒருவர் சிக்கியது எப்படி? முக்கிய ஆதாரமான காற்றாலை சிசிடிவி?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே ஒரு கிராமத்தில் 17 வயது பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை போலீஸார் கைது செய்தது எப்படி என்பதை பார்க்கலாம்.
விளாத்திக்குளம் அருகே ஒரு கிராமத்தில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, தேர்வுக்கு படித்துவிட்டு மார்ச் 10 ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றவர் காணவில்லை என அவரது பெற்றோர் குளத்தூர் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் அடுத்த 11 ஆம் தேதி அந்த கிராமம் அருகே முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் அந்த மாணவி இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மாணவியை கொன்றவர்களை கைது செய்யப்படாததால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை போலீஸார் தனியாக ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குற்றத்தில் அவர் மட்டுமே ஈடுபட்டாரா அல்லது வேறு யாரேனும் ஈடுபட்டனரா, சாயல்குடியை சேர்ந்தவருக்கு விளாத்திக்குளத்தில் என்ன வேலை என்றெல்லாம் விசாரணை நடத்தப்படுகிறது.
இவரை கைது செய்யப்பட்டது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவி இறந்த பகுதியை சுற்றிலும் இருந்த டவரை வைத்து 1200 செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதனிடையே 5 நபர்களின் டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காற்றாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர். அதில் ஒரு மர்ம நபர் இரு சக்கரவாகனத்தில் வந்து சென்றது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications