Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமியார் வீட்டு விருந்துக்கு போன மாப்ளை.. பக்கத்துலேயே மாமனார்.. ஆன்திவே-யில் அலறிய கல்யாண பொண்ணு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மாமியார் வீட்டுக்கு காதல் மனைவியுடன், விருந்துக்கு கிளம்பினார் மணி.. தன்னுடன் பெற்ற தாயையும் அழைத்துக் கொண்டு, விருந்துக்கு கிளம்பினார். அப்போதுதான் இப்படி ஒரு கொடுமை நடந்தது.

மதுரை கேகே நகரில் வசித்து வருபவர் மணி.. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியாகும்.. 22 வயதில், இவருக்கு பிரியவரதன் என்ற மகன் இருக்கிறார்..

Thoothukudi Love Marriage and why did father in law throw son in law from the running car

மதுரை: இவர் சினேகா என்ற பெண்ணை சில வருடங்களாகவே காதலித்து வந்தார். சினேகாவும் மதுரையை சேர்ந்தவர்தான்.. பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியில் வசித்து வருகிறார். ஒருகட்டத்தில், இவர்களது காதல் விவகாரம், 2 வீட்டுக்குமே தெரியவந்தது.. இதனால், 2 வீட்டிலுமே இவர்களின் காதலை ஏற்க மறுத்துவிட்டனர். காதலர்கள் எவ்வளவோ போராடி பார்த்தும், பெரியவர்களின் சம்மதத்தை பெற முடியவில்லை.

அதனால், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி கோவைக்கு வந்துவிட்டனர்.. பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணமும் செய்து கொண்டனர்... அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, தனிக்குடித்தனமும் ஆரம்பித்தனர்..

மணமகன்: 2 வீட்டிலும், இந்த காதல் ஜோடி எங்கே இருக்கிறார்கள்? என்பது பற்றின தகவல்கள் கிடைக்கவில்லை.. சில மாதங்கள் கழித்துதான், கோவையில் இவர்கள் வசித்து வருவது தெரியவந்திருக்கிறது.. முதலில், மணமகன் பிரியவரதன் வீட்டினர், இவர்களை தொடர்பு கொண்டு பேசினார்கள்..

மகன் பிரியவரதனுக்கு அவரது அப்பா மணி போன் செய்து, நடந்ததை எல்லாம் மறந்து விட்டதாகவும், வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு கூப்பிட்டிருக்கிறார்.. இதனால், பிரியவரதன் திக்குமுக்காடிப்போனார்.. கல்யாணத்துக்கு சம்மதம் கிடைத்து விட்டதால், காதல் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார் பிரியவரதன்.. மணமக்களுக்கு ஜரூர் வரவேற்பு, தடபுடல் உபசரிப்பு நடந்தது.. 3 நாட்கள் சொந்த வீட்டிலேயே, மனைவியுடன் தங்கி, விருந்து சாப்பிட்டார் பிரியவரதன்..

உறவினர்கள்: இதனிடையே, தங்கள் மகள், மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ள தகவல், சினேகாவின் பெற்றோருக்கும் தெரியவந்தது.. இதனால், சினேகாவின் அப்பா, அம்மா, மற்றும் உறவினர்கள் 2 பேர் என 4 பேரும் கிளம்பி வந்தனர்.. அவர்களும் தங்கள் பங்கிற்கு மருமகனையும், மகளையும் தங்கள் ஊருக்கு விருந்துக்காக அழைத்து செல்ல விரும்புதாக, சம்பந்தி மணியிடம் சொன்னார்கள்..

இதற்கு மணியும் சம்மதித்தார்.. பிறகு, மகன் பிரியவரதன், மருமகள் சினேகா ஆகியோருடன் தன்னுடைய மனைவி சின்னம்மாளையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார் மணி.. அனைவரும் ஒரு காரில், சினேகாவின் சொந்த ஊரான சாத்தங்குடிக்கு பயணமானார்கள்.. மேலஉரப்பனூர் கண்மாய் அருகே கார் சென்றபோது, திடீரென காரின் வேகம் குறைந்தது..

சின்னம்மா: அப்போது, பிரியவரதனையும், அவரது அம்மா சின்னம்மாளையும், காரில் இருந்த சினேகாவின் அப்பா ஜீவானந்தம் திடீரென கீழே தள்ளிவிட்டார்.. அவருடன் வந்த 2 உறவினர்களும் ஜீவானந்தத்துடன் சேர்ந்து, அவர்களை கீழே தள்ளிவிட்டனர்.. இதனால், நிலைகுலைந்து ரோட்டில் விழுந்த இருவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.. அவர்கள் சுதாரிப்பதற்குள், அவர்களிடமிருந்து செல்போனையும் பறித்துக்கொண்டு சினேகாவை மட்டும் காரில் அழைத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

மகளை காதலித்தது பிடிக்காததால், மாமனார் செய்த சூழ்ச்சி, அப்போதுதான் பிரியவரதனுக்கு தெரியவந்தது.. இதையடுத்து, கடத்தி செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டு தருமாறு திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரியவரதன் புகார் கொடுத்துள்ளார்.. போலீசாரும், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.

கொடூர கொலை: இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பும், கும்பகோணத்தில் ஆணவ கொலையே நடந்துவிட்டது. சரண்யா - மோகன் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இப்படித்தான் திருமணம் செய்து கொண்டனர்.. அந்த தம்பதியையும் இப்படித்தான் விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

மாப்பிள்ளைக்கு வயிறு நிறைய அசைவ விருந்து போட்டுவிட்டு, விடிகாலை நேரத்தில் அரிவாளாலேயே வெட்டிக்கொன்றார் மாமனார்.. அதை தடுக்க வந்த பெற்ற தாயையும் தாக்கிவிட்டு, மகள் சரண்யாவையும் விரட்டி விரட்டி சென்று, ரோட்டிலேயேவெட்டி சாய்த்தார்.. பட்டப்பகலில் இரு கொலைகளும் நடந்ததை பார்த்து, கும்பகோணமே அதிர்ந்து போனது.

சாதி வெறி: சாதி வெறியின் தீவிரம் குறையவேண்டுனால், சாதி மறுப்பு திருமணங்களையும், கலப்பு மணங்களையும் அதிகரிக்க செய்ய வேண்டும் என்கிறார்கள்... ஆனால், விருந்து என்ற பெயரில் அழைத்து, இப்படி வெட்டி சாய்த்தால், என்னவென்று சொல்வது??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+