நாதஸ்வர மேளமில்லை..சொந்த பந்தமில்லை..தூத்துக்குடியில் வேப்பமரத்தடியில் நடந்த காதல் கல்யாணம்
தூத்துக்குடி: சாலை ஓரத்தில் வேப்பமரத்தடியில் இருந்த அம்மனை சாட்சியாக வைத்து காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டுள்ளது. தூத்துக்குடியில் நிகழ்ந்த இந்த காதல் திருமணத்தை சாலைகளில் கடந்து சென்றவர்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் சொல்வார்கள். சுற்றமும் நட்பும் புடைசூழ.. சொந்த பந்தங்கள் வாழ்த்த கெட்டி மேளம் கொட்ட ஒரு சுபயோக சுப தினத்தில் திருமணங்கள் நடைபெறும்.
அவரவர் வசதியைப் பொறுத்து திருமண மண்டபங்களிலும் கோவில்களிலும் திருமணம் நடைபெறுவது வழக்கம். சிலரோ வீட்டு வாசலில் கூட திருமணம் செய்து கொள்வார்கள். அது அவரவர்கள் விருப்பம். காதல் திருமணமாகவே இருந்தாலும் நண்பர்கள் புடைசூழ ரிஜிஸ்டர் அலுவலகத்திலோ கோவிலிலோ கல்யாணம் செய்து கொள்வார்கள்.

பேருந்து நிறுத்தத்தில் திருமணம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டினார் ஒரு மாணவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் அந்த திருமண வீடியோவை வெளியிட்டவரும் மாணவிக்கு தாலி கட்டியவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது.

வேப்பமரத்தடி அம்மன்
தூத்துக்குடியில் இன்றைய தினம் சாலையோர வேப்பமரத்தடியில் அவசரம் அவரசமாக ஒரு இளம் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியின் பெயர் தினேஷ்,கார்த்திகா என்பதாகும். தினேஷ் ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகாவை காதலித்தார்.

பெற்றோர் எதிர்ப்பு
இந்த காதலுக்கு கார்த்திகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. காரணம் இருவரும் வேறு சமுதாயம் என்பதாலேயே கார்த்திகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தினேஷின் பெற்றோர் சம்மதத்துடன் பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கழுத்தில் மஞ்சள் கயிறு
தூத்துக்குடி தமிழ்சாலை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலுக்கு தம்பதி சமேதராக வந்தனர். ரோஜா பூ மாலை மட்டுமே அவர்களின் கழுத்தில் இருந்தது. புதுமண தம்பதியருக்கான எந்த வித அலங்காரமோ அடையாளமோ அவர்களுக்கு இல்லை. சாதாரண மஞ்சள் கயிற்றை கார்த்திகாவின் கழுத்தில் கட்டினார். நாதஸ்வர மேளமில்லை. பெரிய அளவில் சொந்த பந்தங்கள் யாருமின்றி எளிமையான திருமணமாக நடைபெற்றது.

வேப்பமரத்தை வலம் வந்த தம்பதி
மூன்று முறை ரோஜா மாலையை மாற்றினர். வேப்பமரத்தடி இசக்கியம்மன் ஆசியுடன் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர் தினேஷின் அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். அக்னியை சுற்றி வலம் வருவதற்கு பதிலாக வேப்பமரத்தை சுற்றி வலம் வந்தனர். உடனடியாக அந்த இடத்தை விட்டு அவசரம் அவசரமாக கிளம்பி சென்றனர்.

காதல் சினிமா பாணியில்
தூத்துக்குடி பிரதான சலையில், பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நடந்த இந்த காதல் திருமணத்தை அவ்வழியே சென்ற பொது மக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர். காதல் திருமணம் என்றாலும் இத்தனை எளிமையாக எங்கும் நடந்திருக்காது என்றும் பேசிக்கொண்டனர். காதல் திரைப்படத்தில் மேன்சன் வாசலில் இருந்த கோவிலில் அவசரமாக தாலி கட்டி திருமணம் செய்வார்கள். அதை விட வேகமாக தூத்துக்குடியில் நடந்து முடிந்துள்ளது இந்த திருமணம்.
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை!












Click it and Unblock the Notifications