திருச்செந்தூர் முருகன் கோயில் பக்தர்கள் கடலில் குளித்தால்.. சுருக் சுருக்னு குத்துதாமே? இது எப்போ?
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம் தென்பட்டு வருகிறது.. ஏற்கனவே திருச்செந்தூரில் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகம் வருவதாக ஏற்கனவே பக்தர்கள் கலக்கத்தில் உள்ளனர். பிறகு, கடலோர பகுதிகளில் அரிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நடுவில் இன்னொரு பிரச்சனை கிளம்பியிருக்கிறது. எனினும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.. என்னாச்சு?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில், கடற்கரையோரம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும், முருகனுக்கு விசேஷமான நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் திருச்செந்தூரில் அலைமோதும்.

கடல் சீற்றம் - கடல் அரிப்பு
ஆனால், திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் பகுதிகளில் சமீபகாலமாகவே சீற்றம் நிறைந்து காணப்படுகிறது.. இதனால், கடற்கரை பகுதியில் சுமார் 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதனால், இதுகுறித்த நேரடி ஆய்வுகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
மற்றொருபக்கம், இந்த கடல் அரிப்பு காரணமாக, மண்ணில் புதைந்துபோன வரலாற்று பொக்கிஷங்கள், அவ்வப்போது கடலோரங்களில் கிடைத்து வருகின்றன..
பொக்கிஷங்கள் - சிலைகள்
திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் கற்சிலைகள் , சிமெண்ட் சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் திடீர் திடீரென எழுந்து நிற்பதை போலவே இருக்கின்றன. இதை பார்க்கும் பக்தர்களுக்கு சிலிர்ப்பு மேலிடுகிறது. இதுபோல, 20க்கும் மேற்பட்ட சிலைகள், 4 கல்வெட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதற்கு நடுவில், கடற்கரையில் கடந்த சில நாட்களாகவே முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருவதாக கூறப்படுகிறது.. இந்த கடல் முள்ளெலிகளில் இருக்கும் சிறிய, கூர்மையான முட்கள், கடலில் புனித நீராடும் பக்தர்கள் மீது குத்தி அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது..இதனால், கடலில் நீராட வரும் பக்தர்கள் அனைவரும் பீதியில் இருக்கிறார்கள்..
முள்ளெலிகள் தொல்லை
இதையடுத்துதான், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடற்கரையில் ஒதுங்கும் முள்ளெலிகளை நீக்குவது என கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. கடற்கரையோரம் கரையொதுங்கும் முள்ளெலிகளை பாதுகாப்பாக அகற்றி பக்தர்கள் நீராட வசதியான சூழலை ஏற்படுத்தி வருறார்கள்..
சிறிய, கூர்மையான முட்கள் கொண்ட, கோளவடிவமுள்ள கடல்வாழ் விலங்குதான் இந்த முள்ளெலிகள்.. கடல் முள்ளெலி, கடல் ஊமத்தை என்றெல்லாம் இதற்கு வேறு பெயர்கள் உண்டு.. தலையை உள்ளே இழுத்து உடலை சுருட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. தன்னுடைய உடல் பாகங்களை சுருக்கிகொண்டு பந்துபோல மாறிவிடும்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த சிறிய உயிரினம் காணப்படுகிறது.. உடலில் முள் முள்ளாக காணப்பட்டாலும், முள்ளம்பன்றிகளும் இவையும் வேறுபட்டவை. முள்ளெலிகள் உடல் அளவில் சிறியவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ரூ 1000 வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications