Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா.. அரோகரா முழக்கத்துடன் கோலாகல கொடியேற்றம்.. 13ல் தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தேரோட்டம் வருகிற 13ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும். இங்கே சுப்ரமணியர் கடலோரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு சந்தனமலை உள்ளது சிறப்பு.

Tiruchendur Subramania Swamy temple Aavani Tiruvizha begins with flag hoisting Therottam on 13th September

திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம், அசுரர்களை சூரபத்மனை சம்ஹாரம் செய்து சம்ஹார மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார். ஐப்பசி மாதத்தில் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. அதே போல ஆவணி திருவிழாவும், மாசி திருவிழாவும் அற்புதமானது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி, வெள்ளை சாத்தி கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

இந்த ஆண்டுக்கான ஆவணித்திருவிழா இன்று அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆவணித் திருவிழா கொடியேற்றத்தையொட்டி திருச்செந்தூரில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் மாலை 4.30 மணி அளவில் ஸ்ரீ அப்பர் சுவாமிகள் தங்க சப்பரம் இரவு 7 மணிக்கு ஸ்ரீ பேவிநாயகர் தங்க பல்லக்கில் அஸ்திர தேவருடன் உலா வருகிறார்.

செப்டம்பர் 5ஆம் தேதி காலை: 10.30 மணி - சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் சிறிய பல்லக்கு இரவு: 7 மணி - சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் பெரிய கேடய சப்பரம்.

செப்டம்பர் 6 ஆம் தேதியன்று காலை: 7 மணி - பூங்கேடைய சப்பரம் - கேடயம் சப்பரத்தில் அம்பாள் ; இரவு தங்க முத்து கிடா வாகனம் - அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்.

செப்டம்பர் 7 வியாழன் காலை தங்க முத்து கிடா வாகனம்; அம்பாள் வெள்ளி அன்ன வாகனம் இரவு: 6.30 வெள்ளி யானை , அம்பாள் வெள்ளி சரப வாகனம்.

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை காலை: 7 மணிக்கு வெள்ளி யானை , அம்பாள் வெள்ளி சரப வாகனம் மாலை 4 மணிக்கு மேலக்கோவில் அபிஷேகம், ஆராதனை இரவு: 7.30 மணி - மேலக்கோவில் குடவருவாயில் தீபாராதனை தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

செப்டம்பர் 9 சனிக்கிழமை காலை 7 மணி - கோ ரதம் ; இரவு 8 மணிக்கு வெள்ளி தேர் , அம்பாள் இந்திர விமானம்.

செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை: 4.30 மணிக்கு பிறகு ஸ்ரீ சண்முகர் உருகு சட்ட சேவை. காலை 5.30 மணிக்கு மேல் ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான் பல்லக்கு காலை 8.30 மணி வெட்டி வேர் சப்பரத்தில் ஆறுமுக நயினார் மாலை: 4.30 மணிக்கு பிறகு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தல்.

செப்டம்பர் 11 திங்கட்கிழமை காலை 5 மணி - பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் ஊர்வலம். காலை 10.30 மணிக்குப் பிறகு - பச்சை சாத்தி சப்பரம் ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான், ஸ்ரீ அலைவாயுகந்தப் பெருமான் வெள்ளி குதிரை வாகனம்.

செப்டம்பர் 12, செவ்வாய்கிழமை காலை 7 மணிக்கு பல்லக்கு இரவு 8 மணிக்கு தங்க கைலாய பர்வதம் , வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள் தேர் கடாக்ஷம்.

செப்டம்பர் 13 புதன்கிழமை ஆவணி தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பெரிய திருப்பல்லக்கு.

செப்டம்பர் 14 வியாழக்கிழமை இரவு 7 மணி புஷ்ப சப்பரம் தெப்பக்குளம் மண்டபம் சேர்தல் அபிஷேகம், அலங்காரம் ஆராதனைக்குப் பிறகு - திருவீதி வலம், மேலைக்கோவில் சேர்த்தல்

செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி மஞ்சள் நீராடல் இரவு 9 மணி மலர் கேடய சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருக்கோவில் சேர்தல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+