ஜூலை 7 ல் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்.. யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உள்ளது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டது. இந்த பணி சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை காலை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.
12 கால யாகசாலை பூஜை நடைபெறுவதற்காக கோவிலின் மேற்கு கோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் 76 வேள்வி குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களாக நடந்து வந்த பணிகள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
முன்னதாக இன்று கோவில் வளாகத்தில் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
இதற்காக கோவிலில் வாஸ்து சாந்தி படம் வரையப்பட்டு அந்த படத்திற்கு பூ தூவி சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து அந்த படத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின் யாகவேள்வி வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, தான்ய வழிபாடு, வேள்விச் சாலை தூய்மை, காப்பு வேள்வி, நில வேள்வி, நிலத் திருக்குட வழிபாடு, தூய மீட்புச் சடங்கு ஆகியவை நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் கும்பாபிஷேகம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கலாம் என்பதால் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications