Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கடலில் குபீர்னு வந்த உருவம்.. குளித்து கொண்டிருந்தவர் அலறி ஓட்டம்.. பரபர தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தபோதுதான், பதறியடித்து கரையேறிவிட்டார்கள்.. கடலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. என்ன நடக்கிறது தூத்துக்குடி கடலில்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.. கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் முன்புறமுள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபாடு செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

tiruchendur jellyfish

பக்தர்கள்: தற்போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருவதால், வழக்கத்தைவிட, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இவர்கள் கடலிலும் புனித நீராடி வருகிறார்கள்.. அப்படித்தான் நேற்றைய தினமும் கடலில் பக்தர்கள் நீராடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் இதுகுறித்து பக்தர்கள் முறையிட்டனர்.. இதையடுத்து, அங்கிருந்த பணியாளர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்தனர்..

ராட்சத ஜெல்லி மீன்: கிட்டத்தட்ட சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது.. அதனை அங்கிருந்து அப்புறப்படுத்திய பணியாளர்கள் கடற்கரை பகுதியிலேயே குழி தோண்டி புதைத்தனர்... சிறிய அளவிலான ஜெல்லி மீன்களை பிடித்துக் கொண்டுபோய் கடலுக்குள் விட்டார்கள்.

பிறகு மாலை நேரத்தில், பக்தர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, மறுபடியும் ஒரு இளைஞருக்கு உடலில் அரிப்பு தென்பட்டுள்ளது.. கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் கடலில் குளித்தபோது, ஜெல்லிமீன் அவரது உடலில் பட்டு, அரிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், கோவில் வளாகத்திலேயே உள்ள முதலுதவி மையத்தில் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

உயிரினங்கள்: கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் இப்படித்தான், ஜெல்லி மீன்கள் திருச்செந்தூர் கடலில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.. கோவில் கடற்கரையில், கொஞ்ச நாட்களாகவே, ஏதோ உயிரினங்கள் கரை ஒதுங்குவதாகவும், அந்த உயிரினம் பார்ப்பதற்கு கண்ணாடி போலவே பளபளவென இருப்பதாகவும் பக்தர்கள் சொன்னார்கள்.. அருகில் சென்று பார்த்தபிறகுதான், அவையெல்லாம் ஜெல்லி மீன்கள் என்று தெரியவந்தது.

நாளுக்கு நாள் இந்த ஜெல்லி மீன்கள் கரையில் ஒதுங்கியவாறே உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த மீன்கள் ஆபத்தானவையாம்.. விஷத்தன்மை உடையதாம்.. மனிதர்களின் உடலில் பட்டாலே, நெருப்பு பட்டதுபோல, தோல் அப்படியே உரிந்து வந்துவிடும்.. ஆனால், இது தெரியாமல் பக்தர்கள் கடலில் குளித்துவிடுகிறார்கள்..

விஷத்தன்மை:
முன்னதாக, இது குறித்து, கடலோர பாதுகாப்பு குழுவினர் சொல்லும்போது, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடற்கரையில் இது போன்ற ஜெல்லி மீன்கள் காணப்படும்.. பார்ப்பதற்கு கண்ணாடி போல இருந்தாலும், இந்த மீன்கள் அதிக விஷத்தன்மை கொண்டவை. உடலில் பட்டதும் ஊறல் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அலர்ட் செய்துள்ளன்ர.

பெயரளவில் ஜெல்லி மீன் என்று அழைக்கப்பட்டாலும், இவை மீன் வகையறா கிடையாது.. கடல் உயிரினங்களிலேயே அழகானதும் இந்த ஜெல்லி மீன்கள்தான்.. அதேசமயம் ஆட்பறிக்கக்கூடிய உயிரினமும் இந்த ஜெல்லி மீன்கள்தானாம். இதனை சிலர் சொறி மீன் என்றும் சொல்வார்கள்.

எச்சரிக்கை: சமீபகாலமாகவே, திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஜெல்லி வகை மீன்கள் அதிக அளவில் தென்பட்டு வருகிறது.,. எனவே, ஜெல்லி மீனின் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், ஜெல்லி வகை மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த, கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.. மேலும், கடற்கரையில் எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+