இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை ! தலையை ஆட்டி நடனமாடிய காட்சிகள்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை, பாகன் மற்றும் மற்றொருவரை மிதித்துக் கொன்றது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பகனை கொன்றதால் யானை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் யானை தெய்வானை மகிழ்ச்சியாக நடனமாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துச் செல்கிறார்கள்.

கடற்கரை ஓரம் இருக்கும் ஒரே ஒரு படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு திருவிழா காலங்களில் முருகப் பெருமானை வழிநடத்திச் செல்ல தெய்வானை என்ற 26 வயது மதிக்கத்தக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருவிழா காலங்களில் போது பெண் யானையான தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும். அப்போது பக்தர்களுக்கு யானைக்கு பழங்கள் வழங்கி ஆசீர்வாதம் பெறுவார்கள். இந்த யானையை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வருகிறார். இதற்காக ராஜகோபுரத்திற்கு அருகிலேயே சிறிய குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் பக்தர்கள் கொடுக்கும் உணவால் யானைக்கு உடல்நல பிரச்சனை வரலாம் என்பதன் காரணமாக அதற்கு உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று யானை கொட்டகை அருகே நின்ற போது யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றார். அப்போது அவரது உறவினரும் முன்னாள் ராணுவ வீரருமான கன்னியாகுமரியை சேர்ந்த சிசுபாலன் என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்துக் தாக்கியது.
இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உதயகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் இழந்தார். யானை மிதித்ததால் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நீண்ட நேரம் யானைக்கு அருகே நின்றதாலும் அதனை தொட்டு செல்ஃபி எடுக்கு முயன்றதால் தன்னை வேறு யாரோ தொடுவதாக உணர்ந்து தெய்வானை பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு தனது பாகனை கொன்றதை உணர்ந்த யானை தெய்வானை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாக கூறப்பட்டது.
தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் யானை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அதிகாலையில் இருந்தே தெய்வானை வழக்கமாக நடனம் ஆடிய படி உற்சாகமாக இருக்கிறது. இதனால் விரைவில் யானை பழைய நிலைக்கு திரும்பும் எனவும் புத்தாக்க முகாமுக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் யானையின் பிறந்த இடமான அசாமுக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என கோயில் நிர்வாகத்தினரும் வனத்துறை அதிகாரிகளும் கூறியுள்ளனர். விரைவில் யானை விரைவில் தனது பணிக்கு திரும்பும் எனவும் கூறப்படுகிறது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications