Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இது முதல் படி..! அடுத்து ராகுல் நேரடியாக பிரதமர் தான் பாருங்க.." பன்ச் வைக்கும் திருநாவுக்கரசர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாகத் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இப்போது பெரிய இக்கட்டான ஒரு சூழலில் உள்ளது. 2014 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளையே சந்தித்து வருகிறது.

கட்சி வலுவாக இருந்த பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. இதனால் கட்சித் தலைமை மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி 2019 மக்களவை தேர்தலுக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க நிர்வாகிகள் மத்தியில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி உள்ளார். இருப்பினும், கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்தல்

தேர்தல்

தேசிய அளவில் கடந்த சில மாதங்களில் மட்டும் பல முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ராகுல் காந்தியின் செயல்பாடுகளையே விமர்சித்து உள்ளனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

இப்போது காங்கிரஸில் இருக்கும் பலரும் ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் புதிய தலைவர் குறித்து திருச்சி எம்பி திருநாவுக்கரசர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் ராகுல் காந்தி பேரணி கன்னியாகுமரியில் இருந்து நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு கேரளா

தமிழ்நாடு கேரளா

இதற்காக வரும் 8,9,10-ஆகிய தேதிகளில் தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து 11ஆம் தேதி கேரளாவில் ராகுல் நடைப்பயணம் தொடங்குகிறார். மொத்தம் 160 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அவர், நாடு முழுவதும் 3500 கிலோமீட்டர் பயணிக்க உள்ளார். இந்த நடைப்பயணத்தை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதில் பல முக்கிய அரசியல் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

ராகுல்

ராகுல்

நமது நாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்களும் யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு யாத்திரைக்கு பின்புதான் அவர்கள் பெரிய தலைவர்களாக உருவாகி உள்ளனர். இதேபோலத் தான் ராகுல் காந்தியும் இந்த மாபெரும் நடைப்பயணத்திற்குப் பின்னர், மிகப் பெரிய தலைவராக உருவெடுக்கப்போகிறார். ராகுல் காந்தி நிச்சயமாக விரைவில் பிரதமர் ஆவார்.

ஒரே தலைவர்

ஒரே தலைவர்

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸில் ராகுல் காந்தியைத் தவிர வேறு யார் இந்த பொறுப்புக்கு வந்தாலும் நிரந்தர தலைவராக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு என்றுமே நிரந்தர தலைவர் என்றால் அது ராகுல் காந்தி மட்டும் தான் இருக்க முடியும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+