சிவப்பு மண்ணுக்குள் பிறந்தமேனி கோலத்தில் திருச்செந்தூர் அதிமுக பிரபலம்.. யாரிந்த தூத்துக்குடி பெண்
தூத்துக்குடி: இளம்பெண்ணின் பேச்சில் மயங்கி விழுந்த அதிமுக பிரமுகரின் நிலைமை படுமோசமாகிவிட்டது. நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லவும் முடியாத அளவுக்க அவதிக்கு ஆளாகி உள்ளார். வெளியில் சொன்னால் மானமே போய்விடுமே என்றும் பயந்துள்ளார்.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை திருச்செந்தூர் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது தூத்துக்குடி மாவட்டத்தில்?
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியை சேர்ந்தவர் அந்த பிரபல அதிமுக நிர்வாகி.. இவர் சொந்தமாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்..
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் என்றால், அதிமுக சார்பில் பெரிய அளவிலான பேனர்கள், கட் அவுட்களை வைத்துவிடுவார்.. மேலும் தன்னுடைய படத்தையும் அந்த கட்அவுட், பேனர்களிலேயே பெரிய சைஸில் வைத்துவிடுவார்.

அதிமுக பிரமுகர்
அதிமுக பிரமுகரின் இதுபோன்ற நடவடிக்கைகளை திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.. பிறகு அவரிடம் மெல்ல பேச்சு தர துவங்கினார்.. நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் பெரியளவு கடன் வாங்கி தருவதாக சொல்லி, நைசாக பேசினார்.. ஆனால், தனக்கு கடன் எதுவும் வேண்டாம் என்று அப்பெண்ணிடம் அதிமுக பிரமுகர் சொல்லி விட்டார்.
ஆனாலும் அந்த பெண் விடவில்லை.. தொடர்ந்து வலிய வலிய வந்து பேசினார். இதனால் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் பேச்சில் மயங்கினார்... இதற்குபிறகு இளம்பெண்ணும், அதிமுக பிரமுகரும் போனில் பேச ஆரம்பித்தனர்.. ஒருநாள் இருவரும் தனிமையில் சந்திக்கவும் முடிவு செய்தனர்.
சில தினங்களுக்கு முன்பு அதிமுக பிரமுகருக்கு போன் செய்த இளம்பெண், தூத்துக்குடிக்கு வருமாறு சொல்லி உள்ளார்.. உடனே அதிமுக பிரமுகரும் பைக்கில் கிளம்பி சென்றார்.
திருச்செந்தூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சொகுசு கார் ஒன்று அதிமுக பிரமுகரை வழிமறித்தது..
காரில் கடத்தல்
அந்த காரில் வந்த 4 பேர், இளம்பெண்ணின் பெயரை சொல்லி, அந்த இடத்துக்கு அழைத்து செல்கிறோம் என்று காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர்..
காரில் ஏறியதுமே, அதிமுக பிரமுகரின் கண், கால், கைகளை கட்டிவிட்டனர்.. பிறகு காரில் தேரிப்பகுதிக்கு அதாவது கடற்கரையோரம் உள்ள சிவப்பு நிற மணல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே அவரை தாக்கி துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தியிருக்கிறார்கள்..
பிறகு மணலில் தலை மட்டும் தெரியும் அளவிற்கு மணலில் புதைத்து வைத்து தாக்கியிருக்கிறார்கள்.. நிர்வாண நிலையில் அதிமுக பிரமுகரை போட்டோ, வீடியோவும் எடுத்தனர்.
சிவப்பு நிற மணல்
இறுதியில், ரூ.50 லட்சம் பணம் தராவிட்டால், மண்ணிலேயே முழுதாக புதைத்து கொன்றுவிடுவோம், நிர்வாண போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள்.
இதனால் பதறிப்போன அதிமுக பிரமுகர், தன்னுடைய நண்பர்களுக்கும், பிசினஸ் பிரமுகர்களுக்கும் போனை செய்து, அவசரமாக ரூ.50 லட்சம் வேண்டும் என்று கேட்டார். ஆனால், அதிமுக பிரமுகர் தங்களிடம் கிண்டலடிக்கிறார் என்று நினைத்து, 50 லட்சமா? காமெடி பண்றியா? என்று கேட்டுள்ளனர்.
நிர்வாண வீடியோ
பலருக்கும் போன் செய்தும், யாருமே அதிமுக பிரமுகரின் சீரியஸ் நிலைமையை புரிந்து கொள்ளவில்லை. இதனால் கடுப்பான அந்த கடத்தல் கும்பல், தொழிலதிபரை மண்ணிலிருந்து விடுவித்துவிட்டு, அவரிடமிருந்த செல்போனை மட்டும அபகரித்து பறந்தது.
இதற்கு பிறகு தன்னுடைய ஊருக்கு திரும்பிய அதிமுக பிரமுகர், நடந்த விஷயத்தை சொன்னால் மானம் போய்விடும் என்பதால், யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். தன்னுடைய நண்பரிடம் மட்டும், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு, மண்ணில் புதைத்து, மிரட்டப்பட்ட சம்பவத்தை சொல்லி உள்ளார்..
இந்த ஆடியோதான் சோஷியல் மீடியாவில் பதரவி வைரலாகிவிட்டது.. அத்துடன் காவல்துறையின் கவனத்தையும் எட்டியது. எனவே, , திருச்செந்தூர் போலீசார் அதிமுக பிரமுகரிடம், துப்பாக்கிமுனையில் கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications