கேஸ் சிலிண்டர் கனெக்சன் வைத்துள்ளவர்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி: பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்ற பயனாளிகள் பலர், தங்களது முதல் எரிவாயு சிலிண்டருக்கு பிறகு நீண்ட காலமாக மாற்று எரிவாயு சிலிண்டர் பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் ஆதாருடன் சென்று கேஸ் ஏஜென்சில் இ-கேஒய்சி புதுப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் கிடைக்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. ஏழை பெண்களுக்கான இந்த இலவச கேஸ் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சிலிண்டர் வழங்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழைகளுக்கும், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் உள்ளவர்களுக்கும், தேயிலை தோட்ட பழங்குடியினருக்கும் அரசு இலவசமாக அடுப்பு மற்றும் ஒரு சிலிண்டர் வழங்குகிறது.

இரண்டாவது சிலிண்டர் உள்பட அடுத்து அவர்கள் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டரும் கணிசமான மானியத்தொகை உடன் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் பெற்ற பலர், முதல் முறைக்கு பிறகு இரண்டாவது முறை சிலிண்டர் வாங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் சிலிண்டரை வாங்காதவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் நிளைவூட்டல் கடிதங்கள் அனுப்புகின்றன ஆனாலும் அவர்கள் சிலிண்டர் வாங்காமல் விட்டுவிடுகிறார்கள். அப்படி வாங்கத்தவறியவர்ளுக்கு இப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்ற பயனாளிகள் பலர், தங்களது முதல் எரிவாயு சிலிண்டருக்கு பிறகு நீண்ட காலமாக மாற்று எரிவாயு சிலிண்டர் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து தனித்தனியாக நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது.
எனவே, 15 நாட்களுக்குள் பயனாளிகள், சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் தங்களது ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விவரங்களை (இ-கேஒய்சி) உடனடியாக புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்ற பயனாளிகளின் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications