தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மக்கள் விரும்புகிறார்கள்.. எச்.ராஜா புதிய சர்ச்சை

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்புகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்புகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு போதுமான மின்சார வசதி வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tuticorin people loves Sterlite, H.Raja strikes again with the new jibe

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் இதனால் கொதிப்படைந்து போய் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார். சேலத்தில் பாஜக விழாவில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து பேட்டியளித்தார்.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்புகிறார்கள். நக்சல்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள். இந்த போராட்டம் காசு கொடுத்து அர்பன் நக்சல் மூலம் நடத்தப்பட்ட போராட்டம் ஆகும்.

மக்கள் முன்னேற கூடாது என்று நக்சல் இதை எதிர்க்கிறார்கள். சாலை வர கூடாது, மின்சார வசதி வர கூடாது, போதுமான அடிப்படை வசதி வர கூடாது என்று நக்சல்கள் இந்த செயலை செய்கிறார்கள்.

உள்ளூர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்புகிறார்கள். அவர்களுக்கு இதனால் வேலை கிடைக்கும். ஸ்டெர்லைட் ஆலை இல்லாமல் பலர் வேலை இழந்து இருந்தனர் என்று எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tuticorin people loves Sterlite, BJP National Secretary H.Raja strikes again with the new jibe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X