தாயை பாத்ரூமில் வீசிய மகன்.. கணவருக்கு கசாயம்.. கொள்ளையிட்ட மனைவி.. 2020ல் அதிர வைத்த தூத்துக்குடி
தூத்துக்குடி: 2020ம் ஆண்டில், தமிழகத்தை அதிர வைத்த.. நெகிழ வைத்த பல சம்பவங்கள் நடந்தன. அதில், ஒவ்வொரு மாவட்டமாக பிரித்து பார்த்தாலும் ஏகப்பட்ட நிகழ்வுகள் கொட்டிக் கிடக்கின்றன.
Recommended Video

அப்படித்தான் தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கிய சில சம்பவங்களின் தொகுப்பை இங்கே பாருங்கள்:

தாயை பாத்ரூமில் தங்க வைத்து, அவர் சுருண்டு விழுந்து கிடந்த பரிதாப வீடியோ, தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கிய வீடியோவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
போஸ்நகரைச் சேர்ந்த நிக்கோலஸ். இவரின் வளர்ப்பு தாய் மரியம். ஆனால் தனது வளர்ப்பு தாயை, வீட்டுக்குள் விடாமல் பாத்ரூமில் தங்க வைத்திருந்தார். பெட்ஷீட் கிடையாது, பாயும் கிடையாது. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் இந்த வீடியோ எப்படியோ வெளியானதால் போலீசார் நிக்கோலஸ் மற்றும் மனைவியை கைது செய்தனர்.
தமிழ் பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னன் என அழைக்கப்படும் சிவந்தி ஆதித்தன் மணிமண்டபத்தை திருச்செந்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பத்திரிக்கை உலகில், கல்வி, விளையாட்டு, ஆன்மீகம், சமூக மேம்பாட்டு பணிகளுக்கு சிவந்தி ஆதித்தன் செய்த பணிகள் ஏராளம். அவருக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில், மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்.
கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து, நகையை கொள்ளையடித்தார் தூத்துக்குடி, தாழமுத்து நகரைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண். போலீசில் இப்படி ஒரு பரபரப்பு வாக்குமூலம் அளித்ததும், மனமுடைந்த வின்சென்ட் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள தலைவன்விடலியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. அவர் படித்த கல்லூரி மாணவர்களோடு தகராறு இருந்தது. இந்த நிலையில், சத்யமூர்த்தி வாக்கிங் சென்றபோது தலை துண்டித்து அவர் கொலை செய்யப்பட்டார். இது தூத்துக்குடி மாவட்டத்தையே உலுக்கியது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications