தூத்துக்குடி, திருப்பூரில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து மரணம்- ஒரே நாளில் 2 பேர் பலி
தூத்துக்குடி: திருச்சி தூத்துக்குடியைத் தொடர்ந்து திருப்பூரில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 3 வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருச்சியில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியதாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற பார்த்திபன் என்பவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பார்த்திபன் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
மேலும் திருப்பூரில் வெள்ள கோவிலைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் முதியவர் உயிரிழந்தார். அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இதில் 98 பேர் பெண்கள், 88 பேர் பெண்கள். அதிகபட்சமாக சென்னையில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. செங்கல்பட்டில் 22, கன்னியாகுமரியில் 15 என மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில் தூத்துக்குடி, திருப்பூரில் ஒரே நாளில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications