அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. கடம்பூர் ராஜு முன் சண்டை போட்ட அதிமுகவினர்.. ஒரே அடிதடி!
தூத்துக்குடியில் அதிமுகவை சேர்ந்த இரண்டு கோஸ்டியினர் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அதிமுகவை சேர்ந்த இரண்டு கோஸ்டியினர் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விளாத்திகுளம் தொகுதி புதூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் கோஸ்டிகள் மோதல் அடிதடியில் ஈடுப்பட்டு இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோரை முன்னாள் எம்.எல்.ஏ வும் அதிமுக செய்திதொடர்பாளருமான மார்க்கண்டேயன், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவும் ,கலை இலக்கிய அணி மாநில செயலாளருமான சின்னப்பன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.
கூட்ட மேடை ஏறியவுடன் ஒரு கோஷ்டியினர் மார்க்கண்டேயனை முதலில் பேச சொல்லுங்கள் என குரல் எழுப்பினர், சிலர் சின்னப்பனை முதலில் பேச சொல்லுங்கள் என்று கூறினார்கள். இரண்டு தரப்பினரும் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதினர்.
இதை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு செய்வதறியாது திகைத்தார். அந்த நேரம் பார்த்து இருகோஷ்டியினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அமைச்சர் கடம்பூர் ராஜும் மேடையில் இருந்து இறங்கி தகறாரு கூட்டத்தில் புகுந்து குரல் எழுப்பினார்.
ஆனால் அவர்கள் கடம்பூர் ராஜுவின் பேச்சை கேட்கவில்லை. இருகோஸ்டிகளும் ஆவேசமாக சண்டையிட்ட நிலையில் போலீசார் அமைச்சரை பாதுகாப்பதிலும் கூட்டத்தை கட்டீப்படுத்துவதாலுமாக பாடுபட்டனர். அதன்பின் அமைச்சர் கடம்பூர் ராஜு பாதியில் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications