பைக் மீது வேன் மோதி விபத்து.. உயிருடன் எரிந்து பலியான 2 இளைஞர்கள்.. மிரண்டு ஓடிய மக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தனது இருச்சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடி அருகே எதிரே வந்த வேன் மோதியதில் இருச்சக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்து தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து இளைஞர்கள் எழுவதற்குள் மளமளவென இரண்டு இளைஞர்களையும் பற்றியது தீ.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர். இது குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தைக் கண்டு இளைஞர்களை காப்பாற்ற சென்ற மக்கள் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததால் மிரண்டு ஓடினர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications