ஏப்ரல் 18ம் தேதி மோடிக்கு மக்கள் சொல்லப் போகிறார்கள் கெட் அவுட்.. உதயநிதி
Recommended Video

கோவில்பட்டி: இந்தியாவின் வில்லன் மோடி. அவருக்கு ஏப்ரல் 18ம் தேதி மக்கள் கெட் அவுட் சொல்லப் போகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகரும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் இவர் பிரதமர், முதல்வர் என வயது வித்தியாசம் பாராமல் விஜய பிரபாகரனை போல் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து உதயநிதி பேசினார்.

மக்கள் தேர்தல்
அவர் அப்போது கூறுகையில் இந்த கொளுத்தும் வெயிலில் மக்கள் நிற்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார்கள் என்று தெரிகிறது. வரும் ஏப்ரல் 18 மோடிக்கு கெட் அவுட் .

பணமதிப்பிழப்பு
5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவதாக கூறி நாமம் போட்டுள்ளார். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது பணமதிப்பிழப்பு அறிவிப்பு செய்தார்.

எப்படி பாதுகாப்பார்
இதனால் என்ன பயன், அவர் அறிவித்த புதிய இந்தியா பிறந்து விட்டதா? கருப்பு பணத்தை ஒழித்து விட்டாரா? தீவிரவாதத்தினை ஒழித்து விட்டாரா? புல்வாமாவில் துணை ராணுவப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மக்களை இவர் எப்படி பாதுகாப்பார்?

தேர்தல் அறிக்கை
இப்படிப்பட்ட கேடு கெட்ட ஆட்சி தேவையா? 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக 10 கோடி பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு என்று நமது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

செய்ய முடியும்
அதே போன்று இந்தியாவில் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதை நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார். இதனை செய்ய முடியாது என்று மோடி தெரிவித்துள்ளார்.

சசிகலா காலில்
நிச்சயமாக முடியும் சொன்னது ராகுல் காந்தி. திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன், நம்முடைய வில்லன் மோடி. இந்தியாவின் வில்லன். 10 மாதகுழந்தை போன்று தரையில் தவழ்ந்து சசிகலா காலில் விழுந்து முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி.

13 பேர் பலி
ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு, 100 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு ஒரு இரங்கல் கூட சொல்லாத பிரதமர் நமக்கு தேவையா? இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்ததே சாதனை என்று முதல்வர் எடப்பாடி கூறுகிறார்.

பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது
ஆண்டுக்கு 35 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளதாக இவர் பெருமையாக தெரிவிக்கிறார். இப்படிப்பட்ட மக்கு முதல்வர் நமக்கு தேவையா? நமக்கு வெற்றி நிச்சயம், பா.ஜ.க டெபாசிட் வாங்க கூடாது, தமிழகத்திற்கு அவர்கள் செய்த துரோகம் போதும்.

வாய் திறக்க மறுப்பு
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று கூறியவர் இன்று தடுமாற்றம், ஏமாற்றம் சூட்கேஸ் மணி ஆகிவிட்டார். ஜெயலலிதா மரணம் ஒரு மர்ம மரணம், அப்போலோவில் 2 இட்லி விலை ஒன்றரை கோடி ரூபாய், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் நடத்தியே ஓபிஎஸ் இன்று வாய் திறக்க மறுக்கிறார் என்றார் உதயநிதி.












Click it and Unblock the Notifications