Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 நிமிட திக் திக் தூத்துக்குடி: பெட்டிக்கடை குழந்தையை தூக்கிய ஜூஸ் ஜோடி.. அடுத்த நொடி தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் பட்டப்பகலில் நடந்த ஒரு குழந்தை கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. ஆனால் நம்முடைய காவல் துறையினரின் மின்னல் வேகத்தில் செயல்பட்டு குழந்தையை மீட்ட சம்பவம் பொதுமக்களின் பாராட்டினை பெற்று வருகிறது.. என்ன நடந்தது தூத்துக்குடியில்?

குலசேகரன்பட்டினம் கீழ மலையன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்.. இவர் அதே பகுதியில் கூல்டிரிங்க்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.. இவரது மனைவி முத்துச்செல்வி.. இவர்களுக்கு கபிலேஷ் என்ற 2 வயது மகன் உள்பட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்..

Thoothukudi Kulasekarapattinam Child Kidnap

பெட்டிக்கடை முத்துச்செல்வி

கார்த்திக் வெளியில் செல்லும்போது, பெட்டிக்கடையை முத்துச்செல்வி கவனித்து கொள்வாராம்.. அப்படித்தான் நேற்று மதியம் கார்த்திக் வெளியில் சென்றிருந்த நேரம், முத்துச்செல்வி தனது கடையை கவனித்துக் கொண்டிருந்தார்.. அந்த நேரத்தில் பெட்டிக் கடைக்கு முன்பாக அவரது மகன் கபிலேஷ் விளையாடிக் கொண்டிருந்தான்..

அப்போது அங்கு பைக்கில் ஒரு தம்பதியினர் வந்தனர்.. அவர்கள் கடையில் ஜூஸ் குடிக்க வந்தவர்கள் போல நடிக்க துவங்கினர்.. பிறகு அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கபிலேஷை கொஞ்சத் தொடங்கினர்... சிறுவனும் அவர்களிடம் அழாமல் இருந்தான்.. இதனால் அவனைத் தூக்கி தங்களது பைக்கில் வைத்து விளையாடுவது போல இருவரும் பாவனை செய்தனர்.. முத்துச்செல்வியோ, வந்தவர்கள் கடையின் கஸ்டமர்கள் என்று நினைத்தாராம்..

ஜூஸ் குடிக்க வந்த ஜோடி

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தம்பதியினர் பைக்கை ஸ்டார்ட் செய்து சிறுவனுடன் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.. தனது கண் முன்னே தன் குழந்தை கடத்தப்படுவதைக் கண்ட முத்துச்செல்வி அலறித் துடித்தார்.. உடனடியாக இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. உடனே போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி உடனடியாக களத்தில் இறங்கினர்..

ரோந்து பணியில் இருந்த போலீசார் அனைத்து பகுதிகளையும் தீவிரமாகக் கண்காணித்தனர்.. அப்போது குலசேகரன்பட்டினம் முதல் திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயில் அருகே ஒரு பைக் நின்றிருப்பதை போலீசார் கண்டனர்..

Thoothukudi Kulasekarapattinam Child Kidnap

மடக்கி பிடித்த போலீஸ்

அங்கு ஒரு தம்பதியினர் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.. அவர்கள் சமாதானம் செய்தும், குழந்தை அழுதுகொண்டேயிருந்ததை போலீசார் கவனித்தனர்.. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.. அப்போது தான் குழந்தையை கடத்தியவர்கள் இந்த தம்பதி என்பது உறுதி செய்யப்பட்டது..

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அந்த ஜோடி, சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த லிங்கதுரை மற்றும் அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது..

20 நிமிடங்களில் சபாஷ் போலீஸ்

இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லையாம்... அந்த ஏக்கத்தின் காரணமாகவே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைத் தூக்கி சென்றதாக போலீசில் தெரிவித்துள்ளனர்.. எனினும், சட்டப்படி இது குற்றம் என்பதால் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்..

கடத்தப்பட்ட 20 நிமிடங்களிலேயே குழந்தையை பத்திரமாக மீட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.. துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+