இதுதான் தரமான சம்பவம்... தூத்துக்குடி மக்களுக்கு வந்த குட்நியூஸ்.. இந்தியாவே திரும்பி பார்க்குதே!
தூத்துக்குடி: தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் 200 மாணவர்களை முதற்கட்டமாக நியமிக்க வின்பாஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது உள்ளூர் மக்களுக்கு நேரடியாக வேலைகளை வழங்க வின்பாஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாகமுதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ரிப்போர்ட் ஒன்றும் கூட அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.

ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC
துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சாதனை
சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் மாநிலத்திலேயே அதிக சிப்காட் தொழில் பூங்காக்கள் இருக்கும். சென்னையில் கிட்டத்தட்ட20 ஆயிரம் ஏக்கருக்கு சிப்காட் உள்ளது .
1. தூத்துக்குடி Ph-1 & 2 : 2509 ஏக்கர் (தற்போது உள்ளது)
2. வைப்பார்: 1,020
3. சிலாநாதம்: 394
4. அல்லிகுளம்: 2,234
5. வேம்பூர்: 2,814
6. இ.வேலாயுதபுரம் : 355
7. மரச்சாமான்கள் பூங்கா : 1,100 ஏக்கர்
சிலாநத்தம் சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் வர வாய்ப்புள்ளது. வரவிருக்கும் அற்புதமான காலங்கள்
தூத்துக்குடி வின்பாஸ்ட்
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் முடிந்து உள்ளது. வரும் ஜூன் மாதம் இறுதியில் இந்த வின்பாஸ்ட ஆலை திறக்கப்பட உள்ளது. உட்புறம் அனைத்து மெஷின்களும் பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் சோதனைகள் செய்யப்பட உள்ளது. சோதனைகள் முடிந்த பின் ஜூன் கடைசி வாரம் ஆலை திறக்கப்படும். இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.
இந்தியாவில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் இதுதான். அதாவது முதலீடு அறிவிக்கப்பட்டு அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக மாறி.. முதலீடாக மாறி.. தொழிற்சாலையாக மாறியதில் இந்த திட்டம்தான் மிக வேகமான திட்டம் ஆகும். கடந்த வருடம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து அனுமதிகளை முடிந்து தளம், மற்றும் கூரை அமைக்கும் பணிகள் முடிந்ததோடு.. உள்ளே மெஷின்களை நிறுவும் பணிகளும் முடிந்து உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி சாதனை
தமிழகத்தின் ஏற்றுமதி முதன்முறையாக 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 9 பில்லியன் டாலர் கூடுதல் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச உயர்வை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.
24-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% (கடந்த ஆண்டில் 10.15% இல் இருந்து உயர்ந்து உள்ளது). இந்த முறை $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை மாநிலம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு $43.56 Bn செய்தது. அதாவது தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இப்போது தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலை மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications