வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்.. தூத்துக்குடி விழாவில் பிரதமர் மோடி உறுதி!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று பேசினார். நமது தமிழ்நாட்டில் ஆற்றல் வளத்தை முழுமையாக பயன்படுத்த தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றிக்கு இடையேயும் பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் மோடி கூறினார்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.. இதற்காக மாலத்தீவில் இருந்து இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசியதாவது:-

வணக்கம்.. இன்று கார்கில் வெற்றி திருவிழா. கார்கில் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். வெளிநாடுபயணத்தை நிறைவு செய்து ராமேஸ்வரம் பூமியில் பதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய தன்னம்பிக்கையுடன் வளர்ந்து வருகிறது. (மோடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை இங்கே கீழே பார்த்துகொள்ளலாம்)
வளர்ச்சி அடைந்த பாரதம் படைப்போம். வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பயணம் 2014ல் தொடங்கியது.
உள்கட்டமைப்பு, எரிசக்தி ஆகியவை ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு போனது. திருச்செந்தூர் முருகன் ஆசியோடு தூத்துக்குடி வளர்ச்சி பெறுகிறது. தமிழ்நாட்டில் சாலைகள், எரிசக்தி விமான நிலையங்கள் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடியின் முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசளித்தேன். தூத்துக்குடி போன்றே காசியை நேசித்தவர் பாரதி. பாண்டி நாட்டு முத்துக்கள் பொருளாதரத்தின் வல்லமையை உணர்த்தியது. உலகின் 3-வது பொருளாதாரமாக இந்தியா மாறும் பிரிட்டனுடன் செய்த ஒப்பந்தத்தால் தமிழக இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரிட்டனில் இனி இந்திய பொருட்களுக்கு சலுகை கிடைக்கும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியவில் தயாரிப்போம் திட்டத்தின் இலக்கை பார்த்து இருப்பீர்கள். ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இன்று கூட பயங்கராவதத்தை ஆதரித்த்தவர்களை தூங்க விடாமல் செய்து இருக்கிறது.
நமது தமிழ்நாட்டில் ஆற்றல் வளத்தை முழுமையாக பயன்படுத்த தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றிக்கு இடையேயும் பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
