திருமணமாகி 1 மாதம்தான்.. அரிவாளுடன் நுழைந்து காதல் ஜோடியை வெட்டி வீசிய "அப்பா!" நடுங்கிய எட்டயபுரம்
மகளையும், மருமகனையும் அரிவாளால் வெட்டிக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக, பெற்றோர் இருவரும் கைதாகி உள்ளனர்.. இந்த கொலை குறித்த கூடுதல் விவரங்களும் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுட்டி.. 50 வயதாகிறது.. இவர் சொந்தமாக வேன், மினி லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் பெயர் ரேஷ்மா.. 20 வயதாகிறது.
கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.. இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வந்தவர் மாணிக்கராஜ்.. 26 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.

எதிர்வீடு
ரேஷ்மா, மாணிக்கராஜ் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.. இருவருமே உறவினர்களும்கூட.. இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததுமே, முத்துக்குட்டி கடும் கோபம் கொண்டார்.. அவசர அவசரமாக மகளுக்கு மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்.. அதன்படி, ஒரு இடத்தில் வரன் பார்த்து நிச்சயமும் செய்ததாக கூறப்படுகிறது... இந்தவிஷயம் தெரிந்ததுமே, கடந்த மாதம் 29-ந்தேதி காதலர்கள் 2 பேரும் ஊரைவிட்டு வெளியேறினர்.. மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு திருமணமும் செய்து கொண்டனர்.

சாயங்காலம்
பிறகு அங்கேயே தங்கியிருந்தனர்.. சில நாட்களுக்கு முன்புதான் புதுமண தம்பதி இருவரும், சொந்த கிராமத்துக்கு வந்தனர்... அங்கு மாணிக்கராஜின் வீட்டிலேயே தங்கி, கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மாணிக்கராஜின் அம்மா மகாலட்சுமி, வேலைக்கு சென்று விட்டார்... அதனால், புதுமண தம்பதியர் மட்டும் வீட்டில் இருந்தனர்... சாயங்காலம் வேலை முடிந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு வந்தார்.. அப்போதுதான், மாணிக்கராஜூம், ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அலறினார்.

முத்துக்குட்டி
இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. புதுமண தம்பதியின் சடலங்களை போஸ்ட் மார்ட்ம் செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், இந்த கொலையை செய்தது முத்துகுட்டி என்பது தெரியவந்தது.. இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் முத்துகுட்டி தலைமறைவாகி விட்டார்.. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த முத்துக்குட்டியை போலீசார் கைது செய்தனர்.

பழிக்குப்பழி
இந்த சம்பவம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. இவர்களின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்ததுமே 2 பேரையும் அழைத்து முத்துக்குட்டி கடுமையாக கண்டித்திருக்கிறார்.. சொந்தக்காரர்கள் என்றாலும், இந்த இரு குடும்பத்துக்குள் சொத்து பிரச்சினை நீண்ட காலமாகவ இருந்து வந்துள்ளது.. அந்த பகையால் பேச்சுவார்த்தை இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்... இதற்கிடையே, இவர்கள் காதலித்ததும், அந்த பகை மேலும் அதிகமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

புதுமண ஜோடி
2 நாட்களுக்கு புதுமணத்தம்பதி முன்பு ஊர் திரும்பிய உடனேயே ஊர் பஞ்சாயத்து இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டுள்ளது.. இறுதியில், தம்பதி இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர்.. பஞ்சாயத்து பிரச்சனையை சுமூகமாக்கினாலும், முத்துக்குட்டி தன்னுடைய மகள் மீது தீராத ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.. இதனால், அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, தம்பதி இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார். கொலை செய்த முத்துக்குட்டிக்கு, உடந்தையாக இருந்த அவரது மனைவியும் தூண்டுகோலாக இருந்துள்ளது விசாரணையின் இறுதியில் தெரியவந்தது.. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரேஷ்மா
கொலை செய்யப்பட்ட மாணிக்கராஜ், சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு சென்று பணம் நிறைய சம்பாதித்து ஊர் திரும்பி உள்ளார்.. ஆனால், அதற்கு பிறகு வேறு வேலைக்கும் செல்லவில்லை.. மது அருந்தி கொண்டு ஊரை சுற்றி வந்துள்ளார்.. இதையெல்லாம் பார்த்த முத்துக்குட்டி, மாணிக்கராஜை மறந்துவிடும்படி மகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.. ஆனால், காதலை மறக்க முடியாமல் ரேஷ்மா தவித்து வந்துள்ளார்..

முத்துக்குட்டி
இதனிடையே, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தத்துக்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறிவிட்டது, முத்துக்குட்டிக்கு மேலும் ஆத்திரத்தை தந்துள்ளது.. இவர்கள் மறுபடியும் வந்தால், வெட்டிக் கொல்லாமல் விடமாட்டேன் என்று ஊருக்குள் சொல்லி கொண்டே வந்தாராம்.. எனவே, போலீசாரும் முத்துக்குட்டியை எச்சரித்து அனுப்பி வைத்திக்கிறார்கள்.. அதனால்தான், புதுமண தம்பதி ஊருக்குள் வந்ததுமே, பஞ்சாய்த்து கூடி பேசி தனிக்குடித்தனம் வைத்துள்ளது..

ஆணவக்கொலை
சம்பவத்தன்று, துணிமணிகளுடன் மனைவியை வெளியூக்கு அனுப்பி வைத்துவிட்ட மாணிக்கராஜ், தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு, எதிர்வீட்டிற்குள் அரிவாளுடன் நுழைந்துள்ளார்.. அப்போது கட்டிலில் படுத்திருந்த தம்பதியை கண்மூடித்தனமாக வெட்டி சாய்த்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.. தென்மாவட்டத்தில் நடந்த இரட்டை ஆணவக்கொலை தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications