திருச்செந்தூரில் குழந்தை கடத்தல்.. கைதான பெண் மயங்கி விழுந்து திடீர் மரணம்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற திலகவதி - பாண்டியன் தம்பதியை இன்று போலீசார் கைது செய்தனர். இதனிடையே கைதான திலகவதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ். கொத்தனார் வேலை செய்து வரும் இவரின் மனைவி ரதி. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் (1½ வயது) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜின் மனைவி ரதி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு மாலை போடுவதாக வேண்டி உள்ளார்.

தசரா திருவிழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், கணவன்-மனைவி இருவரும் குழந்தை ஸ்ரீஹரிசுடன் கடந்த மாதம் 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக வந்தனர். அங்கு கோவில் வளாகத்தில் தங்கி இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவர்களுடன் நன்றாக பேசி பழகி உள்ளார்.
குலசேகரப்பட்டினம் அருகே உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குழந்தை ஸ்ரீஹரிஸ் உடன் முத்துராஜ் ரதி தம்பதி கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளனர். அப்போது இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின்னர் , துணி துவைப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே உள்ள சுகாதார வளாகத்துக்கு வந்திருக்கிறார்கள்.
அங்கு ரதியை பார்த்த அந்த பெண், நைசாக பேசி உள்ளார். இதற்கிடையே, முத்துராஜ் சோப்பு வாங்கி வருவதாக கூறி கடைக்கு சென்றுள்ளார். அப்போது ரதியுடன் கலகலவென்று பேசிக் கொண்டிருந்த பெண், திடீரென குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டு வருவதாக அந்த பெண் தூக்கி சென்றார். பின்னர் குழந்தையுடன் அந்த பெண் மாயமாகிவிட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராஜூம், அவரது மனைவி ரதியும் தங்களது குழந்தையை தீவிரமாக தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது தான் அவர்களுக்கு அந்த பெண் தங்களுடன் நன்றாக பழகி நாடகமாடி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
பைக்கில் இருவர் குழந்தையை தூக்கி சென்ற காட்சிகள் சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று கோவையில் குழந்தையை கடத்தி சென்ற தம்பதியை போலீசார் பிடித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திலகவதி - பாண்டியன் தம்பதிதான் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தை சேலத்தில் இருப்பதாக அவர்கள் வாக்கு மூலம் அளித்தனர்.
இதையடுத்து குழந்தையை மீட்க அந்த தம்பதியை போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென திலகவதி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக திலகவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனிடையே, கடத்தப்பட்ட குழந்தையை சேலம் ஆத்தூரில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications