சிங்க முக விக்.. கேமராக்களுக்கு பெயிண்ட் ஸ்பிரே.. வேலூரில் நகைக் கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளை
வேலூர்: வேலூரில் பிரபல நகைக் கடை ஒன்றில் திருடர்கள் 15 கிலோ எடை கொண்ட தங்கம், வைரம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிக்கப்பட்டிருந்தது.
Recommended Video
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் காட்பாடி சாலையில் பிரபல நகைக் கடை அமைந்துள்ளது. இந்த கடை 5 மாடிகளை கொண்டதாகும். எனினும் தரைத் தளம், முதல் தளத்தில் மட்டுமே விற்பனை நடைபெறுகிறது.
கடையின் 5ஆவது மாடியில் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்கியுள்ளார்கள். அது போல் இரவு நேர பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு திருடர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டனர்.

தப்பி சென்ற கொள்ளையர்கள்
இதையடுத்து திருடிவிட்டு அதே வழியில் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயுள்ளதாக கூறுகிறார்கள். இதன் மதிப்பு ரூ 7 கோடியாகும். கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்யப்பட்டன.

முகமூடி
அப்போது ஒருவர் முகமூடியை அணிந்து கொண்டு நகைக் கடைக்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் ஒரு ஸ்பிரேவை கொண்டு அனைத்து சிசிடிவிக்களிலும் பெயிண்ட்டால் அடித்துவிட்டதால் எந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகவில்லை.

கட்டடங்கள்
எனினும் நகைக் கடையை சுற்றியுள்ள சாலைகள், பக்கத்து கட்டடங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவிகள் மூலம் விசாரணை நடந்து வருகிறது. உள்ளூர் கொள்ளையர்களா அல்லது வடமாநிலத்தவர்களின் வேலையா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகைக் கடையின் சுற்றுச்சுவரில் ஒரு தலைமுடி விக் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழாய்
விசாரணையில் காற்று வெளியேறும் வெண்டிலேட்டர் குழாய் மூலம் கொள்ளையர்கள் தரை தளத்தின் உள்ளே நுழைந்து பால் சீலிங்கை உடைத்து குதித்து கொள்ளை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் சிங்க முகத்தை கொண்ட முகமூடி அணிந்த நபர் உள்ளே நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications