Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கை மாறிய" கணவன்.. 18 வயது ஜூஸ் காதலி.. "அது" வேற டார்ச்சர்.. சட்டுனு உதிர்ந்த கர்ப்பம்.. இப்படியுமா

18 வயது பெண்ணின் கள்ளக்காதல் விவகாரம் போலீஸ் வரை பஞ்சாயத்தாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஒரு வித்தியாசமான சம்பவத்தை போலீசார் எதிர்கொள்ள நேர்ந்தது.. பள்ளிகொண்டா போலீசார், அதை டீல் செய்த விதம், அந்த பகுதி மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. ஒட்டுமொத்த பேரையும் திணறடித்து விட்டார் ஜஸ்ட் 18 வயதே நிரம்பிய ஒரு இளம்பெண்..!!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் புதுமனையை சேர்ந்தவர் அந்த பெண்.. ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்திருக்கிறார்..

அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அவரது தாய்மாமாவுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்... இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஜூஸ் கடைக்கு போன அந்த பெண்ணை காணவில்லை.

 ஜூஸ் கடை

ஜூஸ் கடை

இதனால் பதறிப்போன பெற்றோர், பள்ளிகொண்டா போலீசில், மகளை காணவில்லை என்று புகார் தந்தனர்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் விசாரணையை துவங்கினர்.. பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், கோகுல் என்பவருடன் அந்த பெண் போனில் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.. ஒதியத்தூரை சேர்ந்தவர் கோகுல்.. 26 வயதாகிறது.. பள்ளிகொண்டா பெட்ரோல் பங்கில் கோகுல் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமானவர்.. 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. இப்போது இவரது மனைவி 6 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார்..

 ஜூஸ் காதலி

ஜூஸ் காதலி

இந்த மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கோகுல்.. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, ஜூஸ் கடை பெண்ணுக்கும், கோகுல் மனைவிக்கும் அறிமுகமாகி உள்ளது.. அடிக்கடி தோழி வீட்டுக்கு வந்து போகவும், கோகுலுடன் நட்பு ஏற்பட்டு, அதுவே கள்ளக்காதலாகவும் மலர்ந்துள்ளது... தோழிக்கு துரோகம் செய்கிறோமே என்றில்லாமல் இளம்பெண்ணும், மனைவிக்கு துரோகம் செய்கிறோமே என்றில்லாமல் கோகுலும், தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்துள்ளார்... கள்ளக்காதலியை எந்நேரமும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கத்தான், அந்த பெட்ரோல் பங்குக்கு பக்கத்திலேயே உள்ள ஜூஸ் கடையில் வேலை வாங்கி தந்தாராம்.

 பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

இதனால் கள்ளஜோடி இருவருமே ஒன்றாக வேலைக்கு போய் வீடு திரும்பியுள்ளனர்... ஒருகட்டத்தில் கள்ளக்காதல் விஷயம், தோழிக்கு தெரிந்துவிட்டது.. அதனால், அந்த ஜூஸ் பெண்ணையும், கோகுலையும் கண்டித்துள்ளார்... இதனிடையே, ஜூஸ் கடை பெண்ணுக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க முடிவானது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, கள்ள ஜோடி அதிர்ந்துபோனது.. உடனே வீட்டை விட்டு ஓடிப்போக ரெடியானார்கள்.. கர்ப்பிணி மனைவியையும், 2 வயது குழந்தையையும் விட்டுவிட்டு, கள்ளக்காதலியுடன் கோகுல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்..

 தாலி தாலி

தாலி தாலி

இப்போது, கள்ளக்காதலி கோகுலுக்கு டார்ச்சர் தர ஆரம்பித்தார்.. ஏதாவது ஒரு கோயிலில் உடனடியாக தனக்கு தாலி கட்டும்படி சொன்னார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன கோகுல், விவாகரத்து செய்யாமல் எப்படி தாலி கட்டுவது என்று யோசித்தார்.. ஆனால், அந்த பெண்ணோ, இப்பவே எனக்கு தாலி கட்டு, இல்லாவிட்டால் விஷம் குடித்துவிடுவதாகவும், "என் சாவுக்கு காரணம், நீ தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு இறந்து விடுவேன்" என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கேட்டு பயந்துபோன கோகுல், கடந்த 25ம் தேதி குடியாத்தத்தில் ஒரு கோயிலில் அந்த பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார்..

 பெருத்த குண்டு

பெருத்த குண்டு

வாடகைக்கு ஒரு வீட்டையும் எடுத்து, அந்த வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர்.. கடைசியில் போலீசார் அந்த வீட்டையே தேடி கண்டுபிடித்துவிட்டு நேரில் போய் நின்றார்கள்.. போலீசாரை பார்த்துமே கள்ளஜோடிக்கு தூக்கி வாரிப்போட்டது.. அப்போது, போலீசார் அந்த பெண்ணிடம், தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் செல்லும்படி அட்வைஸ் செய்தனர்.. ஆனால், அந்த பெண்ணோ, "அதெப்படி தாலி கழட்டி தர முடியும்? நான் கர்ப்பமாக இருக்கிறேன், கோகுலை விட்டு போக முடியாது" என்று குண்டை தூக்கி போட்டார்.. இதைக்கேட்டு போலீசார் குழம்பி விட்டார்கள்..

 கர்ப்பமாயிட்டேன்

கர்ப்பமாயிட்டேன்

எதுவானாலும் பெற்றோருடன் செல்லுங்கள், பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.. ஆனால், அந்த பெண், ஸ்டேஷனிலேயே தரையில் உருண்டு பிரண்டு, அழுது களேபரமாக்கியுள்ளார்... இந்த ஜோடி போலீஸ் ஸ்டேஷன் வந்திருப்பதாக தகவலறிந்து, கோகுலின் மனைவியும் 2 வயது மகனை தூக்கிக்கொண்டு அங்கு வந்துவிட்டார்.. அந்த இளம்பெண்ணின் காலடியில், தன்னுடைய குழந்தையை போட்டு, "என் கணவனை எனக்கு தந்துவிடு, கர்ப்பிணியாக உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்" என்று கதறினார். அப்போதும் அந்த பெண், "நானும்தானே கர்ப்பமாக இருக்கிறேன்" என்று பதிலுக்கு வாதாடினார்..

 தாலியை தாரேன்

தாலியை தாரேன்

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் விழித்தனர்.. இறுதியில், எஸ்ஐ ராஜகுமாரி, அந்த பெண்ணை மெடிக்கல் செக்கப் செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.. டெஸ்ட்டுகளையும் எடுக்க சொன்னார்.. அந்த ரிசல்ட்டும் வந்தது.. கடைசியில் பார்த்தால், அந்த பெண் கர்ப்பமாக இல்லை என்பது உறுதியானது.. இதற்கு பிறகு, கோகுலை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.. உடனே இதைக்கேட்டு இளம்பெண் மறுபடியும், கூச்சல் போட்டு அழுது ஒப்பாரி வைத்தார்.."தாலியை கூட கழற்றி தரேன், அவரை ஜெயிலில் தள்ளிடாதீங்க" என்று தேம்பி, தேம்பி அழுதுகொண்டே தாலியை கோகுலிடம் தந்தார்... இவ்வளவும் நடந்து முடிய மொத்தம் 3 மணி நேரமாகிவிட்டது.. அதற்கு பிறகு பெற்றோரிடம் அந்த ஜூஸ் கடை பெண்ணை போலீசார் ஒப்படைத்தனர்..!!!

மாறிய தடம்

மாறிய தடம்

இந்த பெண்ணின் அப்பா ஒரு விவசாயி.. ஒதியத்தூர் பகுதியிலேயே விவசாயம் செய்து வருகிறார்.. பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துள்ள பெண், மேற்கொண்டு படிக்கவில்லை.. ஆனால், திடீரென வேலைக்கு செல்லவும், அதை தடுக்கவில்லை.. ஆனால் வீட்டில் இருக்கும்போது எந்நேரமும் போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதை பார்த்து, அவரது அப்பா பலமுறை கண்டித்துள்ளார்.. மகளின் போக்கு தடம்மாறுவதை புரிந்துதான், தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர்... ஆனால், பால் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு கடைக்கு போனவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அதனால்தான், போலீசுக்கு சென்றனர் பெற்றோர். காதல் விவகாரம் எதுவுமே அவர்களுக்கு தெரியவில்லை. ஸ்டேஷனில் நடந்தவைகளை பார்த்து, அவர்களே வாயடைத்து போய் நின்றார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+