100 வருட கனவு.. 2 ஆதிவாசி கிராம மக்களின் எதிர்காலத்தையே மாற்றிய தமிழக அரசு.. வாவ்.. ஆச்சர்ய செய்தி!
வேலூர்: 100 வருட காத்திருப்பிற்கு பின் வேலூரை சேர்ந்த இரண்டு மலை ஆதிவாசி கிராமங்களுக்கு தார் ரோடு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருப்பது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.இந்தியாவில் அதிக அரசு பேருந்துகள் இயங்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவில் பல மாநிலங்களில் டெல்லி உட்பட சரியாக பொது போக்குவரத்து சேவை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து சேவை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து சேவை சிறப்பாக இருந்தாலும் கூட சில கிராமங்களில் போக்குவரத்து முழுமையாக செயல்பட முடியவில்லை. மலை கிராமங்களில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.
மலை கிராமங்களில் சாலை அமைப்பதும், அங்கே தொடர் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதும் கடினமான செயலாக உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் பொது போக்குவரத்து சேவை ஏற்படுத்தப்படாத கிராமங்களில் ஏற்படுத்தப்படும்.எல்லா கிராமங்களுக்கும் பொது போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்று மாநில அரசு மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து துறை சார்பாக இதற்கு அறிக்கையும் கூட வெளியிடப்பட்டது.
இதையடுத்து பல கிராமங்களுக்கு தற்போது சாலை வசதி, போக்குவரத்து வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் இருக்கும் பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களுக்கு சாலை அமைத்து, கடினமான மலை பாதையில் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்தில் பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் சாலை: இந்த நிலையில்தான் தற்போது 100 வருட காத்திருப்பிற்கு பின் வேலூரை சேர்ந்த இரண்டு மலை ஆதிவாசி கிராமங்களுக்கு தார் ரோடு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருப்பது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
முத்துக்குமரன் மலையில் இருந்து பீஞ்சமண்டை பழங்குடியினர் கிராமம் வரை 6.4 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மலை சாலையை அமைச்சர்கள் துரைமுருகன் (நீர்வளம்), தங்கம் தென்னரசு (நிதி), எம்.மதிவேந்தன் (வனம்) ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சாலை 5.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 794 பழங்குடியின மக்களுக்கு ரூ.10.03 கோடி மதிப்பிலான சேவைகளும் அமைச்சர்கள் மூலம் நேற்று வழங்கப்பட்டன. இந்த சாலை காரணமாக அங்கே உள்ள குக்கிராமங்கள் பயன் அடையும். 2000கும் மேற்பட்ட குடும்பம் பலன் அடையும். மக்கள் இனி எளிதாக டவுன் செல்ல முடியும்.
மாணவ, மாணவியர் படிப்பது எளிதாகும். இவர்களின் கல்வி எதிர்காலமே மாறும் . மருத்துவ சேவைகளை விரைவாக வழங்க முடியும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலை பாதையின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருவதோடு மக்கள் இடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications