வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை.. 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: 2022ஆம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு வேலூரில் ஆண் நண்பருடன் ஆட்டோரில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் திரையரங்கில் இரவு காட்சி பார்த்துவிட்டு, ஆட்டோவில் ஏறியுள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளனர்.

police crime

ஷேர் ஆட்டோ என்பதால், அவர்கள் ஏறிய நிலையில், தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பெண் மருத்துவர் ஆட்டோ ஓட்டுநரிடம் கூறி இருக்கிறார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், பாலாற்றின் கரைக்கு கூட்டி சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் மருத்துவரை கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர்களின் ஏடிஎம் கார்டு மூலமாக ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டதோடு, 2 பவுன் தங்க நகையையும் பறித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக எஸ்பி அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து வழக்கில் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மொத்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று காலை குற்றவாளிகள் 5 பேரையும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை செய்தியாளர்கள் சுற்றி நின்று வீடியோ எடுத்தனர்.

இதனால் கோபமடைந்த குற்றவாளி ஒருவர், செய்தியாளரை தாக்க முயன்றார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் சிறுவனை தவிர்த்து சகோதரர்கள் உட்பட 4 பேரான பார்த்திபன், பரத், சந்தோஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவனுக்கு மட்டும் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+