வேலூரில் ரூ.1,692க்கு ஆசைப்பட்டு ரூ.35 ஆயிரத்தை இழந்த பிரபல ஜவுளி நிறுவனம் .. என்ன நடந்தது?
வேலூர்: கடந்தாண்டு ஜூலை மாதம் வேலூர் காட்பாடியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் புதிய துணிகள் எடுப்பதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார் துர்கா தேவி. இவர் துணிகள் எடுத்த பின்னர் அதற்கான பில் தொகை ரூ.1,692-ஐ துர்காதேவி தனது செல்போன் யு.பி.ஐ. மூலம் ஜவுளிக்கடையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் பணம் போகவில்லை என இருமுறை வாங்கியிருக்கிறது ஜவுளி நிறுவனம்.
கூடுதலாக அனுப்பிய பில்தொகை ரூ.1,692-ஐ திருப்பி கொடுக்காத ஜவுளிக்கடைக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜவுளி கடை, ரயில்வே, வங்கி, போக்குவரத்து, பெட்ரோல் பங்க், நிதி நிறுவனம் என சேவை அளிக்கும் எந்த நிறுவனங்கள் மீது வேண்டுமானாலும் சேவை குறைபாடு தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் அளித்து சேவை குறைபாட்டிற்காக நிவாரணம் பெற முடியும்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செஞ்சி பகுதியை சேர்ந்த துர்கா தேவி என்பவர் கடந்தாண்டு ஜூலை மாதம் காட்பாடியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் புதிய துணிகள் எடுப்பதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அங்கு துர்கா தேவி தேவையான துணிகள் எடுத்துள்ளார். பின்னர் அதற்கான பில் தொகை ரூ.1,692-ஐ தனது செல்போன் யு.பி.ஐ. மூலம் ஜவுளிக்கடையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் பணம் வரவில்லை என்று ஜவுளிக்கடை ஊழியர்கள் கூறி உள்ளனர். துர்காதேவி தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது போன்று செல்போன் ஆப்பில் காண்பிப்பதாக தெரிவித்தார்.
அதற்கு ஜவுளிக்கடை ஊழியர்கள், வங்கியின் சர்வர் பிரச்சினை காரணமாக பணம் வரவில்லை என்றும், மீண்டும் ஒருமுறை பில் தொகையை அனுப்பும் படியும் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து அவர் மீண்டும் ஒருமுறை ரூ.1,692-ஐ ஜவுளிக்கடையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். அதற்கு மறுநாள் துர்காதேவி காட்பாடியில் உள்ள வங்கிக்கு சென்று அவரின் வங்கி கணக்கை சரிபார்த்த போது 2 முறை ரூ.1,692 எடுக்கப்பட்டதை கண்டார்.
இதையடுத்து துர்கா தேவி அந்த ஜவுளிக்கடைக்கு சென்று இதுபற்றி முறையிட்டார். அதற்கு அவர்கள் அந்த பணத்தை டி.டி. எடுத்து முகவரிக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்துக்கான டி.டி.யை அனுப்பவில்லை. அதனால் துர்காதேவி வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட் உறுப்பினர்கள் அஸ்கர் கான், அசினா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம், வங்கி கணக்கிற்கு வந்த கூடுதல் பில் தொகையான ரூ.1,692-ஐ வாடிக்கையாளருக்கு திருப்பி கொடுக்காத ஜவுளிக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் வழக்கை நடத்தியதற்கான செலவு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை துர்கா தேவிக்கு வழங்க உத்தரவிட்டார். இதன் மூலம் ரூ.1,692-ஐ திருப்பி கொடுக்காத ஜவுளிக்கடைக்கு ரூ.35 ஆயிரம் இப்போது பறிபோயிருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications