வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எது இன்று உன்னுடையதோ.. அது நாளை வேறொருவருடையது.. தினகரனுக்கு கனகச்சிதமாக பொருந்திய கீதாசாரம்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பரிசுப் பெட்டி சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடாமல் டிடிவி தினகரன் குழப்பத்தை தவிர்த்தார்.

ஜெயலலிதாவின் ஆர் கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை ஓரங்கட்டிவிட்டு குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.

தலையில் மல்லிகைப்பூ, ஆரஞ்சு கலர் பட்டுபுடவை.. முகத்தில் பூரிப்பு.. மகளுடன் செல்பி.. நளினி ஹேப்பி! தலையில் மல்லிகைப்பூ, ஆரஞ்சு கலர் பட்டுபுடவை.. முகத்தில் பூரிப்பு.. மகளுடன் செல்பி.. நளினி ஹேப்பி!

சின்னம்

சின்னம்

இந்த கட்சியானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொதுச் சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி

ஆகஸ்ட் 5-ஆம் தேதி

இதையடுத்து அமமுகவுக்கு பொதுச் சின்னத்தை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த சின்னத்தில் போட்டியிட்ட அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் வேலூருக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலில்

தேர்தலில்

கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாலும் நிரந்தர சின்னம் இல்லாததாலும் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என தினகரன் அறிவித்தார். இதனால் வேலூரில் மும்முனை போட்டி நிலவுகிறது. 18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வேறு சின்னம்

வேறு சின்னம்

இந்த நிலையில் 18 சுயேச்சைகளுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. இதில் சுகுமார் என்ற சுயேட்சை வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டகத்தை ஒதுக்கியுள்ளது. தினகரன் போட்டியிட்டிருந்தால் அவருக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

கஷ்டம்

கஷ்டம்

ஏற்கெனவே பரிசுப் பெட்டகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே தினகரன் படாதபாடு பட்டுவிட்டார். இந்த நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த தினகரன் நிறைய கஷ்டப்பட்டிருப்பார். தினகரனை பார்க்கும் போது எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது என்ற ஸ்ரீகிருஷ்ணரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

English summary
An Independent Candidate contest in TTV Dinakaran's gift box in Vellore Loksabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X