அசையாமல் அமைதியாக நின்ற அரக்கோணம் கல்லூரி பேராசிரியர்.. ஆடிப்போன ரயில் என்ஜின் டிரைவர்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மகன், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நன்றாக சென்ற இவர்களது வாழ்க்கையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு வினையாகிவிட்டது. வீட்டுக்கடன் மற்றும் நகைக்கடன் வாங்கி கடனை அடைத்த பேராசிரியர், கடைசியில் செய்த காரியம் ரயில் ஓட்டுநரையே ஆடிப்போக வைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை பறிகொடுப்போர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். பலர் பணத்தை இழந்து, கடனை கட்ட முடியாமல் விதியை முடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பேராசிரியர் செய்திருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தினகரனுக்கு 42 வயது ஆகிறது. இவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்துமதி குருவராஜபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் மகள், 5 வயதில் மகன்கள் இருக்கிறார்கள்.
பேராசிரியர் தினகரனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறாராம். இதில் அவர் ரூ.25 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த கடனை வீட்டுக்கடன் மற்றும் நகைக்கடன் வாங்கி அடைத்திருக்கிறார்.
அது மட்டுமின்றி தெரிந்தவர்களிடமும் கடனாக பணத்தை வாங்கி மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். அந்த பணமும் போதாத நிலையில் கடன் செயலிகளில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் கடன் பிரச்சினையை தீர்த்து விட்டு வருமாறு கூறி அவரை தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்திவிட்டது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தது மட்டுமின்றி, கல்லூரி நிர்வாகமும் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியதால் விரக்தியடைந்த தினகரன் அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் என்ஜின் டிரைவர் இதுகுறித்து சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தந்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார் பேராசிரியர் தினகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications