மகளை காதலித்த மெக்கானிக்கை.. அடித்தே கொன்ற தந்தை.. மொத்தம் 6 பேர் கைது.. வேலூர் ஷாக்

மகளை காதலித்த நபரை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: மகளை காதலித்த இளைஞரை, அந்த பெண்ணின் அப்பா அடித்தே கொன்ற சம்பவம் வேலூரை மிரள வைத்து வருகிறது.

வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மகன் கோகுல்.. 17 வயதாகிறது.. ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. கோகுல் சிறுமியை காதலிப்பது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது...

Auto mechanic killed by six due to love issue near Vellore district

இதனால், சிறுமியின் பெற்றோர் கோகுலை கண்டித்துள்ளனர்.. ஆனாலும் சிறுமியை விடாமல் விரட்டி விரட்டி பின்தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 24-ந்தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு கோகுல் சென்று கொண்டிருந்தார்.. அப்போது சாயிநாதபுரத்தில். சிறுமியின் அப்பாவும் அவரது நண்பர்கள் 5 பேரும் மடக்கி பிடித்து, தங்கள் பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது, அவளை விட்டுவிடுமாறு எச்சரித்துள்ளனர்..

இது தகராறாக உருவெடுத்துள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கோகுலை சரமாரியாக தாக்கி உள்ளனர்.. இதில் நிலைகுலைந்து கோகுல் படுகாயமடைந்து மயங்கி சரிந்து விழுந்துவிட்டார்.. இதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.. அக்கம்பக்கத்தினர் சாலையில் விழுந்து கிடந்த கோகுலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்... அங்கு கோகுலுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது..

இதுகுறித்து பாகாயம் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறுமியின் அப்பா தந்தை ராஜகுரு, அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், நண்பர்கள் தண்டபாணி, செந்தில், மாதவன், சிட்டிபாபு ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்... இதனிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனால் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோகுலின் உறவினர்கள் போலீசில் புகார் தந்துள்ளனர்.. அந்த புகாரின்பேரிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+