Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது தான் வேலூர் மக்களின் பாசம்.. ஜோலார்பேட்டையில் மொழி தெரியாமல் தவித்த பீகார் காவலர் மகள்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த ரியோ போர் பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரரின் மகள் வீட்டில் சண்டை போட்டுவிட்டு, யாரிடமும் சொல்லாமல் ரயிலில் ஏறி ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார். ஆனால் பீகார் போலீஸ்காரரின் மகள் மொழி தெரியாமல் தவித்துள்ளார். அவர் வீட்டை விட்டு ஓடிவந்ததை கண்டுபிடித்த பெண்கள், பாசத்துடன் மீட்டு உபசரித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவியை அவரது பெற்றோருடன் பீகார் போலீசார் பீகாருக்கு அழைத்துச் சென்றனர்.

வந்தாரை வாழவைக்கும் ஊரு என்று தமிழ்நாட்டை சொல்லலாம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த பாகுபாடும் இன்றி வாழ முடியும்.. தமிழ்நாட்டிற்கு வடமாநிலத்தவர் முதலில் நுழையும் பகுதி என்றால் ஒன்று சென்னையாக இருக்கும்.. இல்லை என்றால் வேலூர் மாவட்டமாக இருக்கும்... ஜோலார்பேட்டை அல்லது காட்பாடியில் தான் பல வட மாநிலத்தவர்கள் நுழைந்து வருகிறார்கள். அப்படி வரும் பலர் பல மாவட்டங்களில் வேலைக்கு செல்கிறார்கள்.

Bihar policeman s daughter rescued by locals near Jolarpet and handed over to police

இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த ரியோ போர் பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவரது மகளான 17 வயது மாணவி அவர் வசிக்கும் பகுதியிலேயே பி.யூ.சி. 2-ம் ஆண்டு (பிளஸ் 2) படித்து வருகிறார். மாணவிக்கும் இவரது சகோதரருக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரமும் சகோதரர்களுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கோபமடைந்த மாணவி, வீட்டில் இருந்த தனது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கிழித்து எரித்து விட்டார். பின்னர் அந்த வழியாக சென்ற ரயிலில் ஏறினார். அந்த ரயில் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு வந்துள்ளார். பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் திரிந்த நிலையில், இடையம்பட்டி பகுதியில் சென்றபோது 2 பெண்கள் சாலையோரம் படுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் சென்று தானும் படுத்துக்கொள்வதாக பீகார் மாநில மொழியில் கேட்டிருக்கிறார். ஆனால் மொழி தெரியாமல் அங்கிருந்த பெண்கள் அருகில் உள்ளவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் மாணவி என்பதும் பீகார் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரரின் மகள் என்பதும் அண்ணனுடன் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறி இங்கு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு சென்று பீகார் மாணவியை மீட்டு விசாரணை மேற்கொண்டு, திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.டி.பி.எஸ். தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்தனர். இதனையடுத்து போலீசார் பீகார் மாநிலத்தில் உள்ள நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு இந்த மாணவி மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வந்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோருடன் பீகார் மாநில நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கீதா குமாரி மற்றும் போலீசார் நேற்று விமானம் மூலம் பெங்களூர் வந்து அங்கிருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை வந்தனர்.

அவர்களிடம் மாணவியை ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி மற்றும் போலீசார் ஒப்படைத்தனர். இதனை அடுத்து மாணவியை பெற்றோருடன் போலீசார் பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு சென்றனர். மொழி தெரியாமல் தவித்த பீகார் மாணவி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த பெண்களை போலீசார் பாராட்டினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+