ஓடும் பஸ்ஸில் கொடூரம்.. "காதல்" பட பாணியில் தூக்கிய பெண் குடும்பம்.. கதறிய காதல் கணவன்.. பரிதாப பலி!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மனைவியை பிரிந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். சென்னையில் இவர் பணியாற்றி வந்துள்ளார்.
அங்கு இருக்கும் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையில் இவர் பணியாற்றி வருகிறார்.

ராணிப்பேட்டை
அதே தொழிற்சாலையில் பணியாற்றிய தேன்மொழி என்ற பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார். குடும்ப காரணங்களால் முதலில் தேன்மொழி இந்த காதலை ஏற்கவில்லை. அதன்பின் அந்த பெண்ணுக்கும் சக்திவேலை பிடித்துள்ளது. இதையடுத்து சக்திவேல் காதலை தேன்மொழி ஏற்றுக்கொண்டுள்ளார்.ஆனால் இரண்டு வீட்டிலும் இந்த திருமணத்திற்கு ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு குடும்பமும் வேறு வேறு ஜாதி.

காதல்
இதனால் இரண்டு குடும்பத்திலும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். இவர்களை குடும்ப உறுப்பினர்கள் தேடியதால், காவல் நிலையத்தில் தம்பதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசார் இரண்டு குடும்பத்தையும் அழைத்து சமரசம் பேசி உள்ளனர். அப்போது சக்திவேல் குடும்பத்தினர் மட்டும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

சக்திவேல்
இதையடுத்து சக்திவேல் தனது மனைவியுடன் சென்று தனது வீட்டில் தங்கி உள்ளார். அப்போது சக்திவேலுக்கு பெங்களூரில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து பெங்களூருக்கு சக்திவேல் - தேன்மொழி இரண்டு பேரும் பஸ்ஸில் சென்றுள்ளனர். இந்த விஷயம் தெரிந்த தேன்மொழியின் பெற்றோர் அதே பஸ்ஸில் இவர்களுக்கே தெரியாமல் பயணம் செய்துள்ளனர். இவர்கள் 4-5 குண்டர்களோடு வந்ததாக கூறப்படுகிறது.

மனைவி
அந்த பேருந்திலேயே சக்திவேலை தாக்கிவிட்டு இவர்கள் தேன்மொழியை தூக்கிக்கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரை ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு தேன்மொழி குடும்பத்தினர் சென்றுள்ளனர். அதன்பின் தேன்மொழியை தொடர்பு கொள்ள முயன்றும் சக்திவேலால் முடியவில்லை. இது தொடர்பாக சக்திவேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர்களும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தேன்மொழி
இந்த நிலையில்தான் தேன்மொழியை சந்திக்க மீண்டும் மீண்டும் கணவர் சக்திவேல் முயன்றுள்ளார். ஆனால் பெண் வீட்டார் தேன்மொழி குடும்பத்தினரை பூட்டி வைத்து கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில் மனமுடைந்த சக்திவேல் எலிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications