பெங்களூர் - சென்னை பயணிகளுக்கு சூப்பர் செய்தி.. வேலூர் ஹை-வேயில் வருகிறது ஏர்போர்ட்.. இனி பறக்கலாம்
வேலூர்: வேலூரில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) பல கோடி ரூபாய் மதிப்பிலான விமான நிலைய வளாகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த விமான நிலைய வளாகத்தை சுற்றி இரும்பு கம்பிகள் மூலம் வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
முக்கியமான பணிகள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலைய வளாகம்: இந்த நிலையில்தான் வேலூரில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) பல கோடி ரூபாய் மதிப்பிலான விமான நிலைய வளாகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த விமான நிலைய வளாகத்தை சுற்றி இரும்பு கம்பிகள் மூலம் வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) அதிகாரிகள், புதிய விமான நிலையத்தில் எஞ்சியிருக்கும் இறுதிப் பணிகளில் ஸ்டீல் வேலியும் ஒன்று. இது முடிந்துவிட்டால் போதும். அதன்பின் பணிகள் இல்லை. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) பாதுகாப்பு தணிக்கைக்குப் பிறகு நவம்பர் மாதத்திற்குள் இந்த விமான நிலையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த விமான நிலையத்திற்கு வரும் விதமாக சென்னை பெங்களூர் சாலையை இணைக்கும் இன்னொரு சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, புதிய விமான நிலையம் 850-மீ ஓடுபாதை, டாக்ஸிவே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை கருவி, விமான போக்குவரத்து கட்டுப்பாடு (ATC) மற்றும் விமான தகவல் பெறும் வசதி, முனைய கட்டிடம் மற்றும் எண்ணெய் கிடங்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எட்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை மட்டுமே நிறுத்தக்கூடிய பழைய விமான ஓடுதளம் 20 இருக்கைகள் கொண்ட விமானங்களைக் கையாளும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வர உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications