வேலூரில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குழந்தை! பெற்ற மகளையே பலாத்காரம் செய்த கொடூரன்! பரபர தகவல்
வேலூர்: பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் வேலூரில் அரங்கேறி உள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் சிறார்களுக்கு எதிரான குற்றம் சமீப ஆண்டுகளாகவே அதிகரித்து உள்ளது.
இந்தச் சூழலில் வேலூர் மாவட்டத்தில் பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

வேலூர்
வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் பகுதியைக் கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். 13 வயதாகும் அந்த சிறுமி, அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளியில் இருக்கும் போது தனக்குக் கடுமையான வயிற்று வலி இருப்பதாக அந்த சிறுமி தெரிவித்து உள்ளார்.

சிறுமி பிரசவ வலி
வயிற்று வலி மிகவும் அதிகமாக இருக்கவே உறவினருக்கு இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அந்த சிறுமியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த சிறுமிக்கு மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

தந்தை
இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அந்த சிறுமி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது தொடர்பாக வேலூர் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அந்த சிறுமியைக் கடந்த 10 மாதங்களாகவே அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

என்ன நடந்தது
அந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர். அந்த சிறுமியும் அவரது சகோதரரும் பாட்டி வீட்டில் தான் தங்கி உள்ளனர். இருப்பினும், அந்த சிறுமி தினமும் தந்தைக்கு உணவு கொடுக்க செல்வாராம். அப்படிச் செல்லும்போதெல்லாம், அந்த சிறுமியைப் பெற்ற மகள் என்ற கூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த கொடூரன்! மேலும், இது தொடர்பாக யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளான்.

கைது
இதன் அடிப்படையில் போலீசார் அந்த சிறுமியின் பெற்றோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தந்தையே மகளைக் கர்ப்பமாக்கி ஆண் குழந்தையும் பிறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications