வேலூர் மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. பல ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா.. கலெக்டர் தகவல்
வேலூர்: தமிழக அரசின் திட்டப்படி புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழை எளிய மக்கள் இலவச மனைப்பட்டா பெற முடியும். அதேநேரம் அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 3 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. அவ்வப்போது இலவச வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுவதாக கலெக்டர் சுப்புலட்சுமி கூறியுள்ளார்.
வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட அறிவிப்பின்படி, வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்குகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் கிராம நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து 2,074 வீட்டுமனை பட்டாக்களும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு 1,330 பட்டாக்களும் (நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள் தவிர), தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிரிவு செய்து 10 ஆயிரம் பேருக்கு பட்டாக்களும் என பல்வேறு துறைகள் மூலம் 21,776 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

வேலூரில் வீட்டுமனை பட்டா
இதில் 12 பேருக்கு பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் வழங்கி தொடங்கி வைத்தார். சட்டமன்ற தொகுதி வாரியாக பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கடந்த 4 ஆண்டுகளில் வேலூர் மாவட்ட வருவாய் தாலுகாக்களில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இணையவழி பட்டா மற்றும் நத்தம் வகைபாடு உள்ளிட்ட அனைத்து இனங்களில் 18,035 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 39,811 பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள்" என்று கலெக்டர் சுப்புலட்சுமி கூறினார்.
இலவச வீட்டுமனை பட்டா குறித்து நீதிமன்றம் தீர்ப்பு
அண்மையில் இலவச வீட்டு மனை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் கூறுகையில், "தகுதியற்ற நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடியாது. மேலும் இலவச வீட்டு மனை பட்டாவை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. இது ஒரு நலத்திட்டத்தின்பேரில் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். தகுதியின் அடிப்படையில் வீடு இல்லாத ஏழைகளுக்கு மட்டுமே இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் வருமான அளவுகோல்கள் மிக முக்கியமானவை" என்று கூறியிருந்தார்கள்.
வீட்டு மனை
எனவே பலரும் நினைப்பது போல் இலவச வீட்டு மனை பட்டா என்பது ஆக்கிரமித்தவர்களுக்கு தரப்படுவது கிடையாது. அது நிலம் இல்லாத வீடு இல்லாத ஏழைஎளிய மக்களுக்கே தரப்படுவதாகும். தமிழக அரசின் திட்டப்படி புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழை எளிய மக்கள் இலவச மனைப்பட்டா பெற முடியும் . அதேநேரம் அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 3 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. அவ்வப்போது இலவச வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கி வருகிறது.
இலவச வீட்டு மனை பட்டா பெற வழிமுறைகள் என்ன
ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போருக்கு மட்டும் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அதேநேரம் நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படாது. இதை ஆக்கிரமித்து வசிப்பவர்கள் புதிதாக பத்திரப்பதிவு கூட செய்ய முடியாது. ஏற்கனவே பதிவு செய்ததையும் விற்கவும் முடியாது.
வீட்டு மனை பட்டா பெற தகுதிகள்
ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் வீட்டு மனை பட்டா பெறலாம். விண்ணப்பிக்கும் நபருக்கு வேறு நிலபுலன் மனை வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் அந்த இடத்தில் வசிக்கும் நபர், குடும்ப அட்டை ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு.. வருமானச்சான்று.. கோட்டா முறையில் பெற சாதி சான்று உள்பட விண்ணப்பத்தில் இணைக்க வேண்டியதிருக்கும். எந்த பகுதியில் குடியிருப்புக்கு ஏற்ற அரசு நத்தம் புறம்போக்கு உள்ளது என்பதை அறிந்து அந்த பகுதியை குறிப்பிட்டு மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications