Duraimurugan: தளபதி மூட்டை.. கிங்ஸ்டன் கல்லூரி ஃபைல்.. கோடிகளில் சிக்கிய பணம்.. அதிர்ச்சி பின்னணி!
வேலூரில் காட்பாடி அருகே உள்ள சிமெண்ட் குடோன் ஒன்றில் நடந்த ரெய்டில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் கோப்புகள் கிடைத்து இருக்கிறது.
வேலூர்: வேலூரில் காட்பாடி அருகே உள்ள சிமெண்ட் குடோன் ஒன்றில் நடந்த ரெய்டில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் கோப்புகள் கிடைத்து இருக்கிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை வேலூரில் காட்பாடி அருகே உள்ள சிமெண்ட் குடோன் ஒன்றில் ரெய்டு நடந்தது.
இந்த ரெய்டை தொடர்ந்து தற்போது கிங்ஸ்டன் கல்லூரியிலும் சோதனை நடக்கிறது. இதனால் துரைமுருகன் தரப்பு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

கிங்ஸ்டன் கல்லூரி
இந்த சோதனையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்னவென்றால், மூட்டையோடு மூட்டையாக கிங்ஸ்டன் கல்லூரியின் ஃபைல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லூரி கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி ஆகும். அந்த கல்லூரிக்கு சொந்தமான முக்கிய ஃபைல்கள் பல இந்த குடோனில் சிக்கி இருக்கிறது.

அதனால்தான் சோதனை
இதன் காரணமாகத்தான் இன்று மீண்டும் கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். இந்த கல்லூரியின் ஃபைல்கள் எப்படி அந்த சிமெண்ட் குடோனிற்கு சென்றது. அந்த பணம் யாருடையது என்று சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.

விவரம்
இந்த குடோனில் இருந்த பணம் எல்லாம் தனி தனியாக கவரில் பேக் செய்யப்பட்டு இருந்தது. அந்த பேக்கில் சரியாக வேலூரில் உள்ள வார்டு எண், தெரு பெயருடன் விவரங்கள் எழுதப்பட்டு இருந்தது. இந்த பணம் எல்லாம் மிக பக்காவாக தயார் செய்யப்பட்டு இருந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

தளபதி மூட்டை
சிமெண்ட் குடோனில் இருந்த பணம் எல்லாம் சாக்கு மூட்டைகளிலும், பெட்டிகளிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சாக்கு மூட்டைகள் பலவற்றில் தளபதி என்று எழுதி இருந்தது. இதை வைத்து இணையத்தில் இப்போதே பலர் திமுகவிற்கு எதிராக பேச தொடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications