வெல்ல முடியாதவர்களின் முட்டாள்தனமான தப்புக்கணக்கு: ரெய்டு குறித்து துரைமுருகன்
வேலூர்: வெற்றி பெற முடியாதவர்கனின் தப்பு கணக்கு தான் இந்த முட்டாள் தனமான நடவடிக்கை என வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளா் துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரி அலுவலங்களில், மூன்று நாட்கள் வருமான வரித்துறைச் சோதனை நடத்தியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக வேலூர் காட்பாடி இல்லத்தில் செய்தியாளர்களிடம் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் " வருமான வரி சோதனை முழுக் முழுக்க அரசியல். அரசியல் அரிச்சுவாடி தெரியாதவர்களால் நடத்தப்படுகிறது. வேலூர் மக்களவை தேர்தலையும், வேலூர் இடைத்தேர்தலையும் தடுக்கும முயற்சி தான் இந்த வருமான வரிசோதனை.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வாந்தார்கள். சோதனையில் ஒன்றும் இல்லை என்றவுடன் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இந்த சோதனையால் 3 நாட்கள் என்னை பிரச்சாரத்துக்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர்.
வருமான வரிசோதனையை நடத்தியது மத்திய, மாநில அரசுகள் தான். வெற்றி பெற முடியாதவர்கள் தப்பு கணக்கு தான் இது. முட்டாள் தனமான நடவடிக்கை. மக்கள் மனதில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது தெரியாமல் சோதனை நடத்துகிறார்கள்.. என்னை அடக்க நினைத்தாலும் தொண்டர்களின் அன்பு போதும். தலைவர் இல்லை என்றாலும், தளபதி அந்த இடத்தில் இருந்து எங்களை வழிநடத்துகிறார்" இவ்வாறு கூறினார்.
-
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications