"நீ எங்கே வேணாலும் போ.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்".. கறாராக பேசிய சுதாகர்.. இப்ப எஸ்கேப்!
வேலூர் திமுக பிரமுகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
வேலூர்: "போடி.. நீ எங்கே வேணாலும் போய் கம்ப்ளைன்ட் பண்ணு.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்.. என்னை எதுவும் பண்ண முடியாது" என்று காதலி தேவியிடம் திமுக பிரமுகர் சுதாகர் கறாராக சொல்லி விட்டாராம்.. காதலியை ஏமாற்றியது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், தற்போது சுதாகர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் சுதாகர்.. இவர் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவில் இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.. இவர் தேவி என்ற பெண்ணை காதலித்தார்.. தேவிக்கு 33 வயசாகிறது... கடந்த 15 வருஷமாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர்.
சென்னை போரூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தேவி நர்ஸாக வேலை பார்க்கிறார்.. 15 வருஷமாக உருகி உருகி லவ் பண்ணிவிட்டு, காலமும் தாழ்த்திவிட்டு, இப்போது வந்து கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று தேவியிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது.. மேலும் தேவியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியும் உள்ளார்.

வேலூர்
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி, வேலூர் எஸ்பி ஆபீசிலும், வேப்பங்குப்பம் ஸ்டேஷனிலும் புகார் தந்துள்ளார்.. அந்த மனு மீது விசாரணையும் நடந்தது.. இதை பற்றி தேவி சொல்லும்போது: "நானும் சுதாகரும் சின்ன வயசில இருந்தே லவ் பண்றோம்.. அவருக்காகத்தான் இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணாம காத்துக்கிட்டு இருக்கேன்.. எங்க லவ் மேட்டர் ஊருக்கே தெரியும்.. ஆனா இப்போ திடீர்னு சொந்தக்கார பொண்ணுகூட கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க.

திமுக
இந்த விஷயம் கேள்விப்பட்டு, சுதாகர்கிட்ட நியாயம் கேட்டேன்.. ஆனா என்னை அவர் அடிச்சிட்டார்.. "போடி.. நீ எங்கே வேணாலும் போய் கம்ப்ளைன்ட் பண்ணு.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்.. என்னை எதுவும் பண்ண முடியாது" என்னு சொன்னார்.. அதனால நான் ஊர் பஞ்சாயத்துல போய் சொன்னேன்.. திருப்பத்தூர்ல மாவட்ட திமுக நிர்வாகிகள் கிட்டயும் புகார் சொன்னேன்.. அவங்களும் பேசினாங்க.. ஆனால் சுதாகர் யார் சொன்னதையும் காதில் வாங்கிக்கல.. இப்போ போலீசில் புகார் தந்திருக்கேன்" என்றார்.

புகார்
ஆனால், தேவியின் புகாரை சுதாகர் மறுத்ததாக தெரிகிறது.. "இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் வேலை பார்த்துட்டு வந்தவன், அதை விட்டுட்டு 10 வருஷமாக அரசியலில் இருக்கேன்.. தேவியை காதலிச்சேன்.. ஆனால், ஒரு கட்சி பிரமுகருடன் தேவிக்கு உறவு இருக்கு.. எனக்கு அது பிடிக்கல.. அதனால 5 வருஷத்துக்கு முன்னாடியே தேவியை பிரிஞ்சி வந்துட்டேன்..

கல்யாணம்
இதைதவிர, எங்க 2 குடும்பத்துக்கும் நில தகராறு இருக்கு.. அதனாலதான் இந்த காதல் பிரச்சனையை மையமா வெச்சு பிரச்சனை பண்றா.. எனக்கு சொந்தக்கார பொண்ணுடன் நடக்க இருந்த கல்யாணமும் நின்னுபோச்சு.. இதுக்கு பின்னாடி, அந்த அந்த கட்சி பிரமுகர்தான் இருக்கார்" என்று சொல்லியிருந்தார்.

தலைமறைவு?
ஆனால், சுதாகர் இவ்வளவு விளக்கம் தந்திருந்த நிலையில், இப்போது தலைமறைவாக இருக்கிறாராம்.. அதுதான் ஏன் என்று தெரியவில்லை.. அவரை தேடும் பணி தொடர்வதாக சொல்லப்படுகிறது.. இந்த விஷயத்தில் யார் சொல்வது உண்மை, யார் மீது தவறு இருக்கிறது என்று தெரியவில்லை.. போலீசார்தான் இது சம்பந்தமான உண்மையை வெளிக் கொணர வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications